உரைப்பாட்டு மடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை. இஃது உரைநடைப் பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு. தொல்காப்பியம் மொழிநடையை 6 வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. அவற்றுள் ஒன்று உரைநடை.

இக்காலத்தில் உரைப்பாட்டு மடையை வசனக் கவிதை என்கிறோம்.

வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. 'உரை' என்பது என்பது பேசும் மொழியின் ஓட்டம். இதனைப் பாட்டு செய்யுள் வயலில் [1] பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை. சிலப்பதிகாரத்தில் இருக்கும் உரைப்பாட்டு மடைப் பாங்கின் ஒருபகுதியை இங்குக் காணலாம்.

‘குருவி ஓப்பியும் கிளி கடிந்தும்
குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும்
அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின்,
வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்;
யாவிரோ?’ என- வஞ்சிக் காண்டம் குன்றக் குரவை

அடிக்குறிப்பு[தொகு]

  1. செய்யுள் என்னும் சொல் வயலையும் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரைப்பாட்டு_மடை&oldid=3338493" இலிருந்து மீள்விக்கப்பட்டது