உக்ரைன் ஸ்கைகட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு ஜிகினா உக்ரைன் ஸ்கைகட்டர்

உக்ரைன் ஸ்கைகட்டர் (Ukrainian Skycutter)(போலந்து ஓர்லிக்)[1] பறத்தலுக்காக வளர்க்கப்படும் ஒரு டிப்லர் புறாவாகும். இது மாடப்புறாவின் ஒரு வகையாகும். இவை பல நுற்றாண்டுகளாக தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்டன.[2]

வரலாறு[தொகு]

இவை தெற்கு உக்ரைனின் கிரிமியா பகுதியில் தோன்றின. இவற்றின் முதல் பதியப்பட்ட வரையறையானது மிகோலயேவ் நகரில் உருவாக்கப்பட்டது.[3]

இரகங்கள்[தொகு]

இவை நிகோலஜெவ்சுகி பொகட்சி மற்றும் நிகோலஜெவ்சுகி டோர்சோவி இனங்களின் குழுவாகும்.

பறத்தல்[தொகு]

உக்ரைன் ஸ்கைகட்டர்

இவை ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு பறக்கக் கூடியவை. அதே உயரத்தில் சில நேரம் இருக்கக் கூடியவை. இவை கர்ணப் புறாக்களைப் போல் சுற்று வட்டத்தில் பறக்காமல், நேரே கூட்டிலிருந்து உயரே பறக்கக் கூடியவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://rzhev.tripod.com/tutcheresi/orlik/orlik.html
  2. www.ukrainianpigeons.com
  3. Jan Wojnowski, Wielka encyklopedia PWN.: Śliz - Trastámara, Wydawnictwo Naukowe PWN, , p. 18, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788301133573
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Polish Orlik
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • கண்கவர் ஓர்லிக்குகள்-

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ரைன்_ஸ்கைகட்டர்&oldid=3536431" இலிருந்து மீள்விக்கப்பட்டது