ஈழமுரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழமுரசு (Eelamurasu) இலங்கையில் வெளிவந்த ஒரு தமிழ் மொழி செய்தித்தாள் ஆகும். 1984 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இச்செய்தித்தாள் வெளியிடப்பட்டது. தமிழ் தேசியவாத முன்னோக்கையும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் ஊக்குவிப்பதற்காக அறியப்பட்டது.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயில் அமிர்தலிங்கம் அவர்களால் 1984 ஆம் ஆண்டு முதல் இதழ் வெளியிடப்பட்டது. [1] 1986 ஆம் ஆண்டு இது விடுதலைப் புலிகளால் கையகப்படுத்தப்பட்டது. உரிமையாளரான அமிர்தலிங்கம் மற்றும் மூத்த செய்தியாளர் ஐ. சண்முகலிங்கம் ஆகியோரைக் கொலை செய்ததன் விளைவாக பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர்கள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர்.

1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படையால் இச்செய்தித்தாள் நிறுவனம் மூடப்பட்டது. இதன் அனைத்து நகல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஈழமுரசு பத்திரிகையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Asian Communication Handbook 2008. Asian Media Information and Communications Centre. 2008. பக். 449. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789814136105. 
  2. "The never say die spirit of Jaffna media". Sri Lanka Brief. 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழமுரசு&oldid=3317710" இலிருந்து மீள்விக்கப்பட்டது