இஸ்ரவேலே கேள்
இஸ்ரவேலே கேள் (எபிரேயம்: שְׁמַע יִשְׂרָאֵל ஷேமா யிஸ்ராயல்; ஆங்கிலம்: "Hear, [O] Israel") எனும் தோராவில் காணப்படும் இந்த இரண்டு சொற்களும் யூதர்களின் காலை மற்றும் மாலை செபங்களில் மிக முக்கியமானதாகும். உபாகமம் 6:4 இல் இது இவ்வாறு காணப்படுகிறது: "இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்."[1]
யூதத்தில் இது ஒரு முக்கியமானதான செபங்களில் பாவிக்கப்படுகிறது. இது ஒரு நாளில் இரு தடவைகள் மனப்பாடமாக ஒப்புவிக்க கட்டளையாகக் காணப்படுகிறது. யூதர்கள் இதை ஒரு இறுதி வார்த்தையாக பாவிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் உறங்கச் செல்லும் முன் சொல்லப் பயிற்றுவிக்கிறார்கள்.
உள்ளடக்கம் [தொகு]
இதிலுள்ள முதல் இயல்பான சொற்களாவன:
- שְׁמַע יִשְׂרָאֵל יְהוָה אֱלֹהֵינוּ יְהוָה אֶחָד - ஷேமா யிஸ்ராயல் யஃவா எலேகினு யஃவா எஃகாட்
யாவே என்பது யூதத்தில் கடவுளைக் குறிக்க பயன்படுத்தும் நேரடி சொல். இதனைப் பொதுவாகப் பயன்படுத்துதல் கூடாது என்பதால், யாவே எனும் சொல்லுக்குப் பதிலாகக் கடவுளைக் குறிக்கப் பயன்படும் இன்னுமொரு அதோனாய் எனும் சொல் பாவிக்கப்பட்டுப் பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளது.
- "ஷேமா யிஸ்ராயல் அதோனாய் எலேகினு அதோனாய் எஃகாட்" - இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள்.
பின்வருமாறு இதற்கு நேரடியான பொருள் கொள்ளலாம்:
- ஷேமா — கேள், அல்லது கவனி
- யிஸ்ராயல் — இஸ்ரவேல், இஸ்ரவேல் மக்கள் எனும் பொருள் கொண்டது
- அதோனாய் — கர்த்தர் என்பதற்கு மாற்றீடான சொல்
- எலேகினு — நம்முடைய தேவன்
- எஃகாட் — முதன்மையான எண் ஒன்று
குறிப்புக்கள் [தொகு]
- ↑ உபாகமம் 6:4