இளநிலை கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளநிலை கட்டிடக்கலை (இந்தியா) (Bachelor of Architecture (India)) என்பது 10+2 எனும் கல்வி நிலைக்குப் பிறகு படிக்கும் கல்வி ஆகும். மேலும் இதனைப் பயில கட்டிடக்கலையில் ஒரு தொழிலுக்காக இந்தியக் கட்டடக் கலை ஆராய்ச்சிக் கழகம் நடத்தப்படும் கட்டிடக்கலைக்கான தேசிய திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். இத்தகைய கல்வியினை முடிப்பவர்கள் கட்டிடக்கலை வடிவமைப்பாளர், கட்டடகக்கவின் பொறியாளர், கட்டடக்கலை வரைவாளர், கட்டடக்கலை உதவியாளர், இந்திய ரயில்வே, பாதுகாப்பு அமைச்சகம், தேசிய கட்டிட அமைப்பு, நகர்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்க கட்டிடக் கலைஞர்கள் என தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணிசெய்கிறார்கள்.

பின்னணி[தொகு]

இளநிலை கட்டிடக்கலை (இந்தியா) என்பது அடிப்படை வடிவமைத்தல் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஆர்வமுள்ள ஒரு மாணவர் கற்கும் பாடமாகும். [1]

தகுதி[தொகு]

இளநிலை கட்டிடக்கலை (இந்தியா) பயில பின்வரும் தகுதிகளைக் கொண்ட எவரும் தொடரலாம்: [2] [3] [4] [5] [6]

  • கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைக் கொண்ட 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 50 சதவீதத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றவர்.
  • இளநிலை கட்டிடக்கலை படிப்பில் சேருவதற்கு தேவையான சதவீதத்துடன் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்.
  • இளநிலை கட்டிடக்கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளுடன், கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மைத் தாள் 2 இல் தகுதி பெற்றுள்ளவர். கட்டிடக்கலைக்கான தேசிய திறன் தேர்வு (NATA) மற்றும் கட்டிடக்கலை திறன் தேர்வு (AAT) ஆகியவை இளங்கலை கட்டிடக்கலை படிப்பில் சேர நடத்தப்படும் இரண்டு முக்கிய நுழைவுத் தேர்வுகள் ஆகும்.
  • அல்லது 10+3 பாடநெறி மாதிரியில் பட்டய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்படிப்பு[தொகு]

இளநிலை கட்டிடக்கலையில் (இந்தியா) முதுகலை பட்டப்படிப்பைப் பயில கீழ்கண்ட தகுதிகள் அவசியம்: [7] [1]

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம்.
  • கேட் (பொதுத் திறனாய்வுத் தேர்வு) மற்றும் CEED (வடிவமைப்புக்கான பொதுவான நுழைவுத் தேர்வு (CEED) சேர்க்கை, இவை முறையே தேசிய தேர்வு முகமை மற்றும் IIT ஆல் ஏற்பாடு நடத்தப்படுகின்றன.
  • அல்லது, தனிப்பயனாக்கப்பட்ட நுழைவுத் தேர்வுகள் அல்லது நேர்காணல்கள் மற்றும் பிறரால் நடத்தப்படும் திறன் அடிப்படையிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் தன்னாட்சி நிறுவனங்களில் கட்டிடக்கலையில் முதுநிலைப் படிப்பைத் தொடரலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "How to get a degree in Architecture: Entrance exams and job prospects". telegraphindia.com. 13 November 2021. https://www.telegraphindia.com/edugraph/career/how-to-get-a-degree-in-architecture-entrance-exams-and-job-prospects/cid/1838721. "How to get a degree in Architecture: Entrance exams and job prospects". telegraphindia.com. 13 November 2021. Retrieved 7 July 2022.
  2. "NATA 2022: Application deadline extended till May 28; check details" (in en). The Indian Express. 25 May 2022. https://indianexpress.com/article/education/nata-2022-application-deadline-extended-till-may-28-check-details-nata-in-7936112/. 
  3. "Physics, Maths and Chemistry to remain a must for architecture admissions: AICTE" (in en). Hindustan Times. 2 April 2022. https://www.hindustantimes.com/india-news/physics-maths-and-chemistry-to-remain-a-must-for-architecture-admissions-aicte-101648853607084.html. 
  4. "NATA results declared by Council of Architecture; here's how to check". The Economic Times. 23 June 2022. https://economictimes.indiatimes.com/news/new-updates/nata-results-declared-by-council-of-architecture-heres-how-to-check/articleshow/92419852.cms. 
  5. "AICTE shares important update for students who want to study architecture" (in en). mint. 30 March 2022. https://www.livemint.com/education/news/aicte-shares-important-update-for-students-who-want-to-study-architecture-11648614801946.html. 
  6. "45% BArch seats go vacant in state" (in en). Hindustan Times. 16 January 2022. https://www.hindustantimes.com/cities/mumbai-news/45-barch-seats-go-vacant-in-state-101642276515073.html. 
  7. "38% dip in B Arch applicants, students blame eligibility criteria" (in en). Hindustan Times. 24 November 2021. https://www.hindustantimes.com/cities/mumbai-news/38-dip-in-b-arch-applicants-students-blame-eligibility-criteria-101637764884588.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளநிலை_கட்டிடக்கலை&oldid=3840308" இலிருந்து மீள்விக்கப்பட்டது