இளங்குருத்துப்புழு தாக்குதலும் - மேலாண்மை முறைகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரும்புப் பயிரில் பல்வேறு விதமான பூச்சிகளின் தாக்குதலும், அவற்றின் சேதமும் அதிகம் காணப்படும். அதில், கரும்புப் பயிர் முளைத்தவுடன் தாக்கும் இளங்குருத்துப்புழு மிக முக்கியமானதாகும்.

இளங்குருத்துப்புழுவின் தாய் அந்துப்பூச்சியானது கரும்புத் தோகையின் அடிப்பாகத்தில் அதன் முட்டைகளை வைக்கும். பின்பு முட்டைகள் பொரித்து, சிறு புழுக்கள் வௌிவந்து கரும்பு தண்டின் அடிப்பகுதியில் துளையிட்டு உள்ளே சென்று நடுக்குருத்தை உண்ண ஆரம்பிக்கும். இப்புழுவின் முதுகில் ஊதா நிறத்தில் 5 கோடுகள் காணப்படும். இதன் தலைப் பகுதியானது அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இப்புழுவானது ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்குச் சென்று அடுத்த பயிரையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. புழு பருவத்தில் (30 நாட்கள்) இவை பல பயிர்களை அழித்து கரும்புப் பயிரிலேயே அவற்றின் கூட்டுப்புழு பருவத்தைக் கழிக்கும். 10 நாட்கள் கழித்த பின்பு முழு அந்துப்பூச்சியாக மாறி வௌியே வரும். தாய் அந்துப்பூச்சியானது பழுப்பு நிற முன் இறக்கையும், வௌ்ளை நிற பின் இறக்கையும் கொண்டு காணப்படும்.

இளங்குருத்துப் புழுவானது கரும்புப் பயிரின் ஆரம்ப காலத்தில் அதாவது பயிரின் 10 முதல் 100 நாட்கள் வரை தாக்கும் தன்மையுடையது. இப்புழுவானது பயிரின் நடுக்குருத்தை தாக்கி அவற்றை வறண்டு விடச்செய்கிறது. இப்புழுவின் இனப்பெருக்கம் மற்றும் இதன் தாக்குதலானது அதிகமான வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், குறைவான மழைப்பொழிவு, குறைவான நீர்பாசனம் இவற்றால் அதிகரிக்கும்.

இளங்குருத்துப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் கோடை காலத்தில் பயிர் செய்யாமல் முன் பட்ட (அக்டோபர் முதல் டிசம்பர் மற்றும் ஜனவரி வரை) நடவு செய்யலாம்.
  • நடவு செய்த 25 முதல் 30 நாட்களில் பச்சைப்பயிர், உளுந்து, சணப்பை, தக்கைப்பூண்டு இவற்றில் ஏதாவது ஒன்றை பாரின் மீது ஒற்றை வரிசையில் ஊடுபயிராக நடவு செய்யலாம். இதனால் பயிர்களுக்கிடையே வெப்ப நிலை குறைவதால் புழுவின் இனப்பெருக்கம் மற்றும் தாக்குதல் குறையும். ஊடுபயிரை மண்ணில் இட்டு மக்க வைப்பதால் மண்ணிண் அங்ககசத்து மேம்படும்.
  • தண்ணீர் வசதி குறைவான இடங்களில் கரும்புப் பார்கள் இடையே தோகை பரப்புதல் மூலமாக மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவது மட்டுமல்லாது, புழுவானது ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு பயணம் செய்வதும் தடுக்கப்படும். இச்சமயத்தில் தோகைகளுக்கு இடையே வாழும் புழுவின் எதிரி பூச்சிகளுக்கு இரையாகி விடும் வாய்ப்பு அதிகம். எனவே தான் இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்த வயல்களில் தோகைகளுக்கு தீ வைக்ககூடாது.
  • தண்ணீர் வசதி அதிகம் உள்ள இடங்களில் அடிக்கடி நீர் பாய்ச்சி கரும்புக் காட்டில் குறைவான வெப்பமும் அதிகமான ஈரப்பதமும் உள்ளவாறு வயலை பராமரிக்கலாம்.
  • பூச்சி தாக்குதலைக் குறைக்க ஓரிரு தடவைகள் பயிருக்கு இலேசாக மண் அணைக்கலாம். பூச்சி தாக்குதல் உள்ள வயலில் ஏக்கருக்கு 6 முதல் 8 வரையிலான இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இன கவர்ச்சி பொறிவைக்கும் போது அதன் குப்பி, உயரம், தண்ணீரின் அளவு, எண்ணெய் முதலியவற்றை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். இது பற்றிய சந்தேகங்களுக்கு தங்கள் பகுதியிலுள்ள கோட்ட அலுவலகங்ளை தொடர்புகொள்ளவும்.
  • மேலும், பூச்சிக்கொல்லிகள் மூலமாகவும் இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் இளங்குருத்துப்புழுவை கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் 20 இ.சி அல்லது லிண்டேன் 20 இ.சி மருந்தை தௌிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் (50மில்லி� 10 லிட்டர் தண்ணீர்) பூச்சிக்கொல்லி 400 லிட்டர் தண்ணீரில் கலந்து 40 டேங் அளவில் தௌிக்கவேண்டும. பூச்சிகொல்லி அடிக்கும் முன்பாக தாக்குதலுக்கு உள்ளான குருத்தைப் பிடுங்கி விட வேண்டும் விசை தௌிப்பான் இல்லாமல் கைத் தௌிப்பான் கொண்டுதான் தௌிக்கவேண்டும். தௌிக்கும்போது மருந்து கலவையானது இலைச் சுருளுக்கு உள்ளும் மற்றும் கரும்புத் தண்டின் அடிப்பாகம் நன்கு நனையும் படியும் அடிக்க வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.
  • குருணை மருந்துகளை விட திரவ மருந்தே நன்றாக பரவும் தன்மை கொண்டதால் திரவ மருந்துகளையே பயன்படுத்தவும். முடியாதவர்கள் பேயர் கம்பெனியின் ரீஜெண்ட் குருணை மருந்தை ஏக்கருக்கு 10 கிலோ அல்லது பெர்ட்டெரா 8 கிலோ/�ஏக்கர் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.
  • இளங்குருத்துப்புழுவின் தாக்குதல் மீண்டும் தென்பட்டால் ரீஜெண்ட் 1 லிட்டர்�/ஏக்கர் அல்லது கோரஜென் 150மில்லி�/ஏக்கர் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காய்ந்த குருத்தினை எடுத்து விட்டு கைத் தௌ¤ப்பான் கொண்டு பயிரின் மீது நன்கு நனையும்படி தௌpக்க வேண்டும்.

கரும்புப் பயிரை ஆரம்ப காலத்தில் இளங்குருத்துப்புழுவின் தாக்குதலில் இருந்து காப்பதால் மட்டுமே வயலில் பயிரின் எண்ணிக்கையை நல்ல முறையில் பராமரிக்க முடியும். மகசூலை தீர்மானிப்பது பயிரின் எண்ணிக்கையும் தனிக்கரும்பின் எடையுமே. எனவே, விவசாயிகள் மேற்சொன்ன வழிமுறைகளை முறையாக கடைபிடித்து இளங்குருத்துப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை குறைத்து பயனடையலாம்.