இலை இடைவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலியஸ் செடியின் தண்டு நுனியின் நுண்ணோக்கி வழிக் காட்சி, இலை இடைவெளிகள் (C) மற்றும் இளம் இலைகளின் இலைத் தடயங்கள் (I) ஆகியவற்றைக் காட்டுகிறது.

ஒரு இலை இடைவெளி (Leaf gap) என்பது ஒரு செடியின் தண்டுப் பகுதியில் இலை வளரும் இடமாகும். இலை இடைவெளி வழியாக வளரும் இலைச் சுவடு மூலம் இலையானது தண்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இலை இடைவெளி என்பது ஒரு இலைச் சுவடு இணைக்கப்பட்ட இடத்திற்கு மேலே உள்ள தண்டுகளின் வாஸ்குலர் திசுக்களில் ஏற்படும் முறிவு ஆகும்.[1] இது தண்டு முனைப் பகுதியில் "ஒரு இலைச்சுவடு ஒரு இலையை நோக்கி பிரிந்து செல்லும் நிலைக்கு மேலே உள்ள முதன்மை வாஸ்குலர் உருளையின் தொடர்ச்சியின் இடைவெளியாக உள்ளது. இந்த இடைவெளி பாரன்கைமா திசுக்களால் நிரப்பப்படுகிறது".[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. answers.com
  2. Little, R. John; Jones, C. Eugene, eds. (1980). A Dictionary of Botany. New York: Van Nostrand Reinhold Company. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-442-24169-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_இடைவெளி&oldid=3918748" இலிருந்து மீள்விக்கப்பட்டது