இலிண்ட்கிரென் ஆக்சிசனேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலிண்ட்கிரென் ஆக்சிசனேற்றம்
Lindgren oxidation
பெயர் மூலம் பெங்ட் ஓ. இலிண்ட்கிரென்
வினையின் வகை கரிம ஏற்றவொடுக்க வினை
இனங்காட்டிகள்
RSC சுட்டெண் RXNO:0000287

இலிண்ட்கிரென் ஆக்சிசனேற்றம் (Lindgren oxidation) என்பது ஆல்டிகைடுகளை கார்பாக்சிலிக் அமிலங்களாக ஆக்சிசனேற்றம் செய்வதற்கான ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையாகும்.[1] சுவீடன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் பெங்ட் ஓ. இலிண்ட்கிரெனின் பெயர் இவ்வினைக்கு சூட்டப்பட்டது.

சோடியம் குளோரைட்டு ஓர் ஆக்சிசனேற்றியாகவு,ம் 3-5 என்ற காரகாடித்தன்மைச் சுட்டெண் கொண்ட இலேசான அமிலச் சூழலிலும் கரைப்பான் கலவையானது நீரில் ஆக்சிசனேற்றம் அடைகிறது. சிக்கலான ஆக்சிசனேற்ற எதிர்வினைகளைத் தவிர்க்க, இவ்வினையில் உருவாகும் ஐப்போகுளோரைட்டை துப்புரவாக்கிகளைப் பயன்படுத்தி வினை கலவையிலிருந்து அகற்ற வேண்டும். அசல் வினையில் சல்பமிக் அமிலமும் இரிசார்சினாலும் துப்புரவாக்கிகளாகப் பயன்படுத்தப்பட்டன. [1] சியார்ச்சு ஏ. கிராசு மற்றும் சக பணியாளர்கள் அலிபாடிக் மற்றும் α,β-நிறைவுறாத ஆல்டிகைடின் ஆக்சிசனேற்றத்திற்காக 2-மெத்தில்-2-பியூட்டீனை துப்புரவாக்கிகளாக முதன்முதலில் பயன்படுத்தினார்கள்.[2][3] பின்னர் ஐதரசன் பெராக்சைடும் ஐப்போகுளோரைட்டை அகற்றும் வேலையை செய்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lindgren, Bengt O.; Nilsson, Torsten (1973). "Preparation of Carboxylic Acids from Aldehydes (Including Hydroxylated Benzaldehydes) by Oxidation with Chlorite". Acta Chemica Scandinavica 27: 888–890. doi:10.3891/acta.chem.scand.27-0888. 
  2. George A. Kraus; Bruce Roth (1980). "Synthetic studies toward verrucarol. 2. Synthesis of the AB ring system". The Journal of Organic Chemistry 45 (24): 4825–4830. doi:10.1021/jo01312a004. https://lib.dr.iastate.edu/chem_pubs/792. 
  3. George A. Kraus; Michael J. Taschner (1980). "Model studies for the synthesis of quassinoids. 1. Construction of the BCE ring system". The Journal of Organic Chemistry 45 (6): 1175–1176. doi:10.1021/jo01294a058. https://lib.dr.iastate.edu/chem_pubs/788. 
  4. Enrico Dalcanale; Fernando Montanari (1986). "Selective oxidation of aldehydes to carboxylic acids with sodium chlorite-hydrogen peroxide". The Journal of Organic Chemistry 51 (4): 567–569. doi:10.1021/jo00354a037.