இலமாகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலமாகான்
Lamakaan
உருவாக்கம்மார்ச்சு 2010
வகைபண்பாட்டு மையம்
தலைமையகம்
சேவைப் பகுதி
ஐதராபாத்து
முழக்கம்இதைக் கொண்டு நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்
வலைத்தளம்http://www.lamakaan.com/

இலமாகான் (Lamakaan) இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா மலையில் உள்ள ஒரு திறந்தவெளி பண்பாட்டு நிறுவனம் ஆகும். [1] இலாப நோக்கற்ற இவ்வமைப்பு கலை, இலக்கியம், நாடகம், இசை மற்றும் விவாதங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு இடத்தை வழங்குகிறது.[2]

வரலாறு[தொகு]

இலமாகான் மார்ச் 2010 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் நிகழ்வுகளை நடத்தத் தொடங்கியது. இது அசுகர் ஃபர்கான், ஊமேரா அகமது, பிசூ மேத்யூ மற்றும் எலாகே இப்டூலா ஆகியோரால் நிறுவப்பட்டது.[3]

மையம்[தொகு]

பெச்சா குச்சா, வர்சி பிரதர்சு, விட்டல் ராவ், அதீக் ஊசைன் கான் போன்ற பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை இலமாகான் நடத்துகிறது. புத்தக வெளியீடுகள், நாடகங்கள் மற்றும் கருத்தரங்குகள் இங்கு நடைபெறுகின்றன. விக்கிப்பீடியா சந்திப்புகள் போன்ற நிகழ்வுகளும் இங்கு நடைபெறுகின்றன. சமகாரா, சூத்ரதர், மான்ச் அரங்கம், நிசும்பிதா, ஏவம், சூதர்கா, தாகேர் அலி பெய்க் தயாரிப்புகள் [4] மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நாடகக் குழுக்கள் இலமாகானில் நாடகங்கள் நிகழ்த்தியுள்ளன.[5]

மூடல் அச்சுறுத்தல்[தொகு]

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதியன்று சுற்றுப்புற குடியிருப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகக் காரணம் காட்டி, மூன்று நாட்களில் மூடுவதற்கு பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியால் இலமாகானுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அறிக்கைக்குப் பிறகு இலமாகான் அமைப்பு குடிமைப் பிரிவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று பதிலளிக்கப்பட்டது. அதற்கு குடிமை அமைப்பு டிசம்பர் 23 அன்று மூடல் அறிவிப்பை வெளியிட்டது. பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் துணை ஆணையரை (வட்டம் 10) தொடர்பு கொண்ட பி. மகேந்தர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் பாதையில் போக்குவரத்துப் பிரச்னைகள் இருப்பதாகத் தெரிவித்தார். வளாகத்தில் பெண்கள் புகைபிடிப்பது ஒரு குறிப்பிட்ட புகார் பற்றியதாகும். [6]

விரைவில் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இலமாகானை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட சலசலப்பு மற்றும் அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி நிகழ்நேர மனுதாரர் தளத்தில் சுமார் 3,000 பேர் கையெழுத்திட்டனர். தகவல் தொழிற்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் இச்சிக்கலின் கவனத்தை ஈர்த்தார். பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் துணை ஆணையர் பி.மகேந்தர் அந்த இடத்தின் உரிமையாளரிடம் பேசியதை அடுத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இந்த அறிவிப்பில் தொந்தரவுக்கான காரணம் என்ன என்று குறிப்பிடப்படவில்லை, மாறாக உரிமம் இல்லாமல் இயங்கும் இடம் குறித்து பேசப்பட்டது. சலகம் வெங்கலராவ் பூங்காவின் வாகன நிறுத்துமிடம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Space that inspires". The Hindu. 2010-05-25. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Where myth meets reality - Hyderabad". The Hindu. 2010-09-07. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. "A home for progressive art: How 'Lamakaan' became one of Hyderabad's iconic cultural spaces".
  4. jha, neha (2014-06-30). "Director Taher Ali is a hit man". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-04.
  5. Hyderabad. "Lamakaan, Banjara Hills, Hyderabad | NGOs in Banjara Hills, Hyderabad". Buzzintown. Archived from the original on 21 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  6. "Lamakaan faces closure threat" (in en-IN). The Hindu. 2015-12-29. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/cities/Hyderabad/lamakaan-faces-closure-threat/article8039067.ece. 
  7. "Lamakaan Closure Notice Withdrawn". The New Indian Express. 1 January 2016. http://www.newindianexpress.com/cities/hyderabad/2016/jan/01/Lamakaan-Closure-Notice-Withdrawn-863206.html. பார்த்த நாள்: 26 January 2019. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலமாகான்&oldid=3654960" இலிருந்து மீள்விக்கப்பட்டது