இலட்சுமண் பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலட்சுமண் பிரபு (Lakshman Prabhu) இன்று இந்திய நகரமாக உள்ள மும்பை தீவை, சில்காரா வம்சத்தின் காலத்தில் ஆண்ட அரசவையில் ஓர் அமைச்சராக இருந்தார். கொங்கணி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தார். பிராமணரான கவுட சாரசுவத் பிராமணரான இவர் கி.பி 1127 ஆம் ஆண்டில் புகழ்பெற்றிருந்த வாக்கேசுவர் கோயில் மற்றும் அதை ஒட்டிய பங்காங்கா கோயில் குளத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டதற்காக இவர் அறியப்படுகிறார். பின்னர் போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்ட இக்கோவில், 1711 ஆம் ஆண்டு மும்பை நகரின் தெற்கு மும்பை பகுதியில் வாழ்ந்து வந்த மற்றொரு கவுட சாரசுவத் பிராமணரான இராம காமத்து என்பவரின் நிதி உதவியால் மீண்டும் கட்டப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமண்_பிரபு&oldid=3919415" இலிருந்து மீள்விக்கப்பட்டது