இலக்கியத்தில் இசைக்கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கியத்தில் இசைக்கருவிகள் பழந்தமிழ் மக்கள் நுட்பமான இசைப் புலமையும், இசை இலக்கண அறிவும் பெற்றிருந்தனர். தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இசை பற்றிக் கூறுகின்றன.

இசைக் குறிப்புகள்[தொகு]

சங்க இலக்கியங்களில் குறிப்பாகப் பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற நூல்களில் இசைப் பற்றிய குறிப்புகள் நிரம்பக் கிடைக்கின்றன.

இசைக் கலைஞர்கள்[தொகு]

பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை போன்ற நூல்களின் மூலம் இசைக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் பல கிடைக்கின்றன. தொல்காப்பியமும் இசை, பண் பற்றி கூறுகிறது.

யாழ்[தொகு]

கர்நாடக இசையின் பெருமை மிகுந்த இசைக் கருவிகளான வீணை, கோட்டுவாத்தியம் ஆகியவற்றுக்கு இணையாகத் தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ் ஆகும். வீணைப் பற்றியக் குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான இடம் தரப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. வீணையைப் போன்றே யாழும் கம்பி, நரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டுக் கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறது.

திருமறையில் சொல்லப்பட்ட இசைக் கருவிகள்[தொகு]

திருமறையில் சொல்லப்பட்ட இசைக் கருவிகளான வீணை, கொக்கரை, கொடுமுழா முதலியவைப்பற்றி கல்லாடம் நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன.

குழல்[தொகு]

பன்னிரண்டாவது திருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரு இசைக் கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

படிமலர்ச்சி[தொகு]

இலக்கியத்தில் உள்ள இசைக் கருவிகளை நரம்புக் கருவி, காற்றுக் கருவி, தோற்கருவி ஆகியவற்றை முறையே யாழ், குழல், முழவு எனப் பொதுப்படக் கூறுவர்.இவை ஒவ்வொன்றிற்கும் உரிய பல்வேறு வகைக் கருவிகளை உருவாக்கினர். இசையின் பரிணாம வளர்ச்சிக்கு இவைப் பெரிதும் உதவின. இவையே பின்னர் பல்வேறு இசைக் கருவிகள் உருவாக வழிவகுத்தன. நான்கு நிலத்திற்கும் இசை, இசைக்கருவிகள் கருப்பொருளாக இருந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பார்வை நூல்[தொகு]

உழிஞை - தமிழியல் ஆய்வு வரலாறு - முனைவர்பட்ட ஆய்வாளர்கள், சென்னைப் பல்கலைக்கழகம், நறுமுகை வெளியீடு.