இருக்கை பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகப்புப்பெட்டி இருக்கை பட்டை குறியீடு
இருக்கை பட்டையும் வார்ப்பூட்டும்.
3 புள்ளி இருக்கை பட்டை
இருக்கை பட்டை மற்றும் காற்று பையினால் காப்பற்றப்பட்ட உயிர்கள்

பாதுகாப்பு பட்டை எனப்படும் இருக்கை பட்டை(seat belt) வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பு சாதனமாகும். இயக்கத்திற்கு எதிராக ஒரு வாகனத்தில் பயணிப்பவர் தீங்கு ஏற்படும் அசைவிலிருந்து பாதுகாக்கும் வகையில் இது பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்தினால் ஏற்படும் மோதலின் போது மரணம் அல்லது தீவிரமான காயம் ஏற்படாமல் காக்கும் சாதனம் இது.

வரலாறு[தொகு]

சீட் பெல்ட் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆங்கிலம் பொறியாளர் ஜார்ஜ் கேலியினால் கண்டுபிடிக்கப்பட்டது. [1] ஆனாலும் நியூயார்க்கை சேர்ந்த எட்வர்ட் ஜே கலக்ஹார்ன்க்கு, இது சம்பந்தமாக முதல் காப்புரிமை (ஒரு பாதுகாப்பு பட்டை பிப்ரவரி 10, 1885 அன்று அமெரிக்க காப்புரிமை 312,085) வழங்கப்பட்டது.[2]

1903 இல், பிரஞ்சு கண்டுபிடிப்பாளர் கஸ்டவ்-டிசையர் லேவியு( Gustave-Désiré Leveau) ஒரு சிறப்பு வகை இருக்கை பட்டையை கண்டுபிடித்தார்.[3]

1911 ஆம் ஆண்டில், பெஞ்சமின் பௌளிஸ் குதிரைப்படை சேணம் போன்ற அமைப்பை ரைட் சகோதரர்களின் 1906களில் உருவான சிக்னல் கார்ப்ஸ் 1 என்ற வானூர்தியில் அமைத்தார். அவர் அதை அவர் புறப்பட மற்றும் இறங்கும் போது பயன்படுத்த வேன்டுமேன்றும் மேலும் அவரது இருக்கை அவரை உறுதியாக கட்டப்படிருக்கும் காரணத்தினால் விமானி சிறப்பாக தனது விமானத்தை கட்டுப்படுத்த முடியும் என பயன்படுத்தினார்.

உலகின் முதல் இருக்கை பட்டை பயன்படுத்துவதை பற்றிய சட்டம் விக்டோரியா, ஆஸ்திரேலியா மாநிலத்தில், 1970 ல் துவக்கப்பட்டது. இது ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிகள் இருக்கை பட்டை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.[4]

வகைகள்[தொகு]

 • 2 புள்ளிகள்
  • லேப் (Lap)
  • சஷ் (Sash)
 • 3 புள்ளிகள்
  • இருக்கையில் பட்டை
 • 4- 5- 6- புள்ளிகள்
 • எழு புள்ளிகள்

இந்தியாவில் இதற்கான சட்டங்கள்[தொகு]

இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டத்தின் 138வது பிரிவின் படி இருக்கை பட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது[5][6]. அண்மையில் மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவில், வாகனத்தில் சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, சிவப்பு நிற சிக்னலை மதிக்காமல் சென்றாலோ ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என நிறைவேற்றப்பட்டுள்ளது.[7]

விழிப்புணர்வு[தொகு]

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் Click It or Ticket - Georgia[8] என்ற திட்டம் இருக்கை பட்டை அணிவதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி பல பிரச்சாரங்கள் நடக்கின்றன. மேடை நாடகங்கள் மூலம் இருக்கை பட்டை அணிவதனை வலியுறுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. [9].

பயன்கள்[தொகு]

 • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு சீட் பெல்ட் அணிந்து வாகனம் வெளியேற்றத்தினை தடுக்கிறது.
 • விபத்தின் போது ஏற்படும் தாக்கத்தின் நேரத்தினை நீட்டிக்க உதவுகிறது.
 • மூளை மற்றும் முதுகுத் தண்டை பாதுகாக்கிறது

சில புள்ளிவிவரங்கள்[தொகு]

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்[10][தொகு]

வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
2008 78
2009 1680
2010 1143
2011 129

மேற்கோள்கள்[தொகு]

 1. Manby, Frederic (24 August 2009). "Clunk, click – an invention that's saved lives for 50 years". Yorkshire Post (Johnston Press Digital Publishing). Retrieved 2010-12-04.
 2. Andréasson, Rune; Claes-Göran Bäckström (2000.). The Seat Belt : Swedish Research and Development for Global Automotive Safety. Stockholm: Kulturvårdskommittén Vattenfall AB. p. 12. ISBN 91-630-9389-8.
 3. World History of the Automobile,Erik Eckermann,SAE, 01-Jan-2001 - Transportation - 371 pages, பக்: 257
 4. A Potted Seat Belt History. Drivers Technology.
 5. http://www.tn.gov.in/sta/Mvact1988.pdf
 6. http://www.who.int/violence_injury_prevention/road_safety_status/2009/laws/seat_belt_india.pdf
 7. மோட்டார் வாகன சட்ட திருத்தம் : அபராதத் தொகைகள் அதிகரிக்கிறது
 8. http://www.gahighwaysafety.org/campaigns/click-it-or-ticket/
 9. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/soon-street-plays-for-awareness-on-seat-belts/article5399571.ece
 10. http://www.hindu.com/2011/01/31/stories/2011013161260300.htm நகரங்களில் இருக்கை பட்டை அணிபவர்கள் மிகவும் குறைவு

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இருக்கை_பட்டை&oldid=1627486" இருந்து மீள்விக்கப்பட்டது