இரீட்டா மகட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரீட்டா மகட்டோ (Rita Mahato) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். பெண்கள் மறுவாழ்வு மையத்தில் பணிபுரிகிறார். 2014 ஆம் ஆண்டு மனிதநேயப் பணிகளுக்காக சுவீடிய அரசு வழங்கும் பெர் ஆங்கர் பரிசைப் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இரீட்டா மகட்டோ 14 வயதில் கட்டாயத் திருமணத்திற்கு ஆளானார். ஒரு வருடம் கழித்து தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது கணவரிடம் குடும்ப வன்முறையை அனுபவித்தார்.[1]

தொழில்[தொகு]

சிராகா மாவட்டத்தில் உள்ள பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இரீட்டா மகட்டா பணிபுரிகிறார். பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு இந்தக் குழு உதவுகிறது.[2] 2007 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் கற்பழிப்பில் இருந்து தப்பிய இருவரை ஆதரித்த காரணத்தால் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மகட்டோவை மிரட்டினர்.[3]மகட்டோ பணிபுரிந்த அலுவலகம் தாக்கப்பட்டது. ஒரு ஆண்கள் குழுவினரால் இவர் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்.[4]மனித உரிமைகளுக்கான பன்னாட்டு கூட்டமைப்பு, சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு மற்றும் பன்னாட்டு அம்னெசுட்டி அமைப்பு ஆகியவை இரீட்டா மகட்டோவுக்கு ஆதரவளித்தனர்.[4][3]

2014 ஆம் ஆண்டில் பாலியல் வன்முறைக்கு எதிரான செயல்பாட்டிற்காக மகட்டோ பெர் ஆங்கர் பரிசைப் பெற்றார்.[5]பரிசாகக் கிடைத்த 15,000 யூரோக்களை கொண்டு முதியோர் இல்லத்தை நிறுவப் போவதாகக் கூறினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Mahato receives 'Per Anger Award' for defending rights of VAW victims" (in English). Kathmandu Post. 18 November 2014 இம் மூலத்தில் இருந்து 8 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200908233540/https://kathmandupost.com/valley/2014/11/18/mahato-receives-per-anger-award-for-defending-rights-of-vaw-victims. பார்த்த நாள்: 8 September 2020. 
  2. United Nations High Commissioner for Refugees. "Nepal's government fails to protect women human rights activists". Refworld (in ஆங்கிலம்). Archived from the original on 8 September 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
  3. 3.0 3.1 "Nepal: Threats and acts of harassment against WOREC members / June 11, 2007 / Urgent Interventions / Human rights defenders / OMCT". www.omct.org. Archived from the original on 8 July 2016. பார்க்கப்பட்ட நாள் 9 September 2020.
  4. 4.0 4.1 "Nepal: Act now for Rita Mahato". www.amnesty.org (in ஆங்கிலம்). Archived from the original on 29 April 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
  5. "2014: Rita Mahato". Forum förlevandehistoria. Archived from the original on 3 September 2017. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீட்டா_மகட்டோ&oldid=3407928" இலிருந்து மீள்விக்கப்பட்டது