இராம் பகதூர் லிம்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் பகதூர் லிம்பூ
Ram Bahadur Limboo
சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
பின்னவர்ஆதித்யா தமாங்கு
தொகுதிசோரெங்கு-சகுங்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ராம் பகதூர் லிம்பூ

1953/1954 (அகவை 70–71)[1]
அரசியல் கட்சிசிக்கிம் சனநாயக முன்னணி
வாழிடம்(s)சோரெங்கு, மேற்கு சிக்கிம் மாவட்டம்
முன்னாள் கல்லூரிவடக்கு வங்காள பல்கலைக்கழகம் (இளங்கலை, இளங்கலைச் சட்டம்)

இராம் பகதூர் லிம்பூ (Ram Bahadur Limboo) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் சனநாயக முன்னணியின் உறுப்பினராக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் சோரெங்-சகுங்கு தொகுதியிலிருந்து சிக்கிம் சட்டமன்றத்திற்குத் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இராம் பகதூர் லிம்பூ, சிக்கிமின் மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள சோரெங்கைச் சேர்ந்த ஏமா கர்ணா லிம்பூவுக்கு மகனாகப் பிறந்தார். 1983 ஆம் ஆண்டில் வடக்கு வங்காளப் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டப் பாடங்களில் பட்டங்களைப் பெற்றார் [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் சிக்கிம் சனநாயக முன்னணியின் உறுப்பினராக சோரெங்-சகுங்கு தொகுதியில் இருந்து இராம் பகதூர் லிம்பூ 6,596 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார், இது மொத்த வாக்கு சதவீதத்தில் 56.5% ஆகும். [1] [2] இத்தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் பாரதி சர்மாவை 1,929 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_பகதூர்_லிம்பூ&oldid=3826634" இலிருந்து மீள்விக்கப்பட்டது