இராமசிம்மதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ramasimhadeva
King of Mithila
ஆட்சிக்காலம்1227-1285 CE
முன்னையவர்Narsimhadeva
பின்னையவர்Saktisimhadeva
மரபுKarnata dynasty

இராமசிம்மதேவர் (Ramasimhadeva) மிதிலையின் கர்னாட் வம்சத்தின் நான்காவது அரசராவார். இவர், தனது தந்தை நரசிம்மதேவனுக்குப் பிறகு பொது ஊழி 1227 இல் ஆட்சிக்கு வந்தார். [1]

விதி[தொகு]

இராமசிம்மதேவன் ஒரு "ஆன்மீகவாதியாகவும், பக்தி இலக்கியத்தின் புரவலராகவும்" விவரிக்கப்படுகிறார், மேலும் இவரது ஆட்சி பொதுவாக மிகவும் அமைதியானது. வேதங்களுக்குப் பல விளக்கங்களைத் தொகுத்தார். இவர் இந்துக்களுக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு விதிகளை உருவாக்கினார். மேலும் அவை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். கிராமக் கணக்காளர்களின் பயன்பாடு உட்பட பல நிர்வாகச் சீர்திருத்தங்களும் இவரது ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. [2]

இவரது ஆட்சியின் போது, திபெத்திய துறவி; தர்மசுவாமின் கர்னாட்டின் முக்கிய தலைநகரான சிம்ரௌங்கத்திற்கு வந்துள்ளார். இராமசிம்மதேவன் அவரை மரியாதையுடன் நடத்தினார். பௌத்தராக இருந்த போதிலும் அவருக்கு அரண்மனை பூசாரி பதவியை வழங்கியதாகவும் அறியப்படுகிறது. இராமசிம்மதேவன் தனது இரண்டாவது தலைநகராக தர்பங்காவை கொண்டிருந்தார். இன்றும் தர்பங்காவில் இவரது பெயரைக் குறிப்பிடும் பல இடங்கள் காணப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. CPN Sinha (1970). "Decline of the Karnatas of Mithila". Proceedings of the Indian History Congress 32: 79–84. 
  2. Mishra. Cultural Heritage of Mithila. 
  3. History of Muslim rule in Tirhut, 1206-1765, A.D.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமசிம்மதேவன்&oldid=3825116" இலிருந்து மீள்விக்கப்பட்டது