ராயூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராஜூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Colonel
Raju
தாய்மொழியில் பெயர்கேணல் ராயூ
பிறப்புஅ. நேமிநாதன்
(1961-05-30)30 மே 1961
இறப்பு25 ஆகத்து 2002(2002-08-25) (அகவை 41)
மலேசியா
மற்ற பெயர்கள்கண்ணன்,
குயிலான்
செயற்பாட்டுக்
காலம்
1983–2002
அமைப்பு(கள்)தமிழீழ விடுதலைப் புலிகள்

ராஜூ அல்லது ராயூ என்னும் இயக்கப் பெயரால் அறியப்படும் அம்பலவாணர் நேமிநாதன் (30 மே 1961 – 25 ஆகத்து 2002) என்பவர் இலங்கை, போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவர்.

நேமிநாதன் 1961 ஆம் ஆண்டு, மே 30 அன்று பிறந்தார். இவர் யாழ்ப்பாண மாவட்டம், சுன்னாகம், எர்லாலை தெற்கைச் சேர்ந்தவர்.[1]

நேமிநாதன் 1983 ஆம் ஆண்டில் நடந்த கறுப்பு யூலை கலவரத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ராயூ என்ற இயக்கப் பெயரைப் பெற்றார்.[1] ராயூ விடுதலைப் புலிகளின் பொறியியல் படையின் தலைவராக பணியாற்றினார்.[1] இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.[1][2] இவர் காலாட் படை பிரிவான சிறுத்தை அதிரடிப்படையின் சிறப்பு தளபதியாக இருந்தார். மேலும் கிட்டு படையணியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருந்தார். புலிகளின் பீரங்கிப் பிரிவை உருவாக்க ராயூ உதவியாக இருந்தார்.[1][2][3] இலங்கை இராணுவம் ராயூவை இரகசியமாக கொல்ல பலமுறை முயன்றது.[3]

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ராயூ வன்னியிலிருந்து மலேசியாவுக்கு படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.[3] இவர் 2002 ஆகத்து 25 அன்று மலேசியாவில் இறந்தார்.[1][2][3] இவரது மரணத்திற்குப் பின் கர்னலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயூ&oldid=3944761" இலிருந்து மீள்விக்கப்பட்டது