இரண்டாம் அர்ச்சுன வர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் அர்ச்சுன வர்மன்
மகாராசாதிராசா
மால்வாவின் அரசன்
ஆட்சிக்காலம்பொ.ச. 1275 - 1283
முன்னையவர்இரண்டாம் செயவர்மன்
பின்னையவர்இரண்டாம் போஜன்
அமைச்சர்கோதேவன்
பட்டப் பெயர்
அர்ச்சுனவர்மன்
வம்சம்பரமாரப் பேரரசு
தந்தைஇரண்டாம் செயவர்மன்
மதம்இந்து சமயம்

அர்ச்சுனன் என்றும் அழைக்கப்படும் இரண்டாம் அர்ச்சுனவர்மன், (Arjunavarman II) மத்திய இந்தியாவிலிருந்த பரமார வம்சத்தின் அரசனாவான். இவன் 13ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், 1270 -1280 களில் மால்வா பகுதியில் ஆட்சி செய்தான்.

வரலாறு[தொகு]

இரண்டாம் செயவர்மனுக்குப் (செயசிம்மன் எனவும் அழைக்கப்படும்) பிறகு ஆட்சிக்கு வந்த இவன் ஒரு பலவீனமான ஆட்சியாளனாக இருந்தான். [1] பொ.ச. 1275இல் செயசிம்மனின் மரணத்திற்குப் பிறகு, பரமார மந்திரி தனது மன்னருக்கு எதிராக கிளர்ச்சி செய்தார் என முஸ்லிம் வரலாற்றாசிரியர் வசாஃப் குறிப்பிட்டுள்ளார். அவர் மன்னரது பெயரையோ அல்லது அமைச்சரின் பெயரையோ குறிப்பிடவில்லை. மந்திரி அநேகமாக கோகனாக இருக்கலாம். [2]

1270களில், தேவகிரியின் யாதவ மன்னன் இராமச்சந்திரன் மால்வா மீது படையெடுத்தான். பொ.ச. 1276இல் வெளியிடப்பட்ட இராமச்சந்திரனின் உதரி கல்வெட்டு, யாதவ மன்னர் "அர்ச்சுனனின் துருப்பிடிக்கும் யானைகளின் கூட்டத்தை அழிப்பதில் ஒரு சிங்கம்" என்று அவனை பெருமைக் கூறுகிறது. [1]

1280களில், இரணதம்பபுரத்தின் (நவீன இரந்தம்பூர் ) ஆட்சியாளர் ஹம்மிரதேவனும் மால்வா மீது தாக்குதல் நடத்தினான். 1288ஆம் ஆண்டு பால்வன் கல்வெட்டு, அர்ச்சுனனின் யானைப் படையை ஹம்மிரதேவன் கைப்பற்றியதாகக் குறிப்பிடுகிறது. [3]

சமணக் கவிஞர் நயச்சந்திர சூரியின், ஹம்மிர மகாகாவியத்தில், ஹம்மிரதேவன் சரசபுரத்தின் அர்ச்சுனனையும், தாரின் போஜனையும் தோற்கடித்ததாகக் கூறுகிறது. இதன் அடிப்படையில், ரமேஷ் சந்திர மஜும்தார், ஹம்மிர தேவன் இரண்டாம் அர்ச்சுனனின் ஆட்சியின்போது ஒருமுறையும், அவனது வாரிசான இரண்டாம் போஜனனின் ஆட்சியின் போது இரண்டாம் முறையும் மால்வா மீது படையெடுத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.[4] அர்ச்சுனனின் மந்திரி கோகதேவன் இரண்டாம் போஜனை பரமார தலைநகர் தாரின் சிம்மாசனத்தில் ஒரு பட்டத்து அரசனாக அமர்த்தினான் அதே சமயம் அர்ச்சுனன் இராச்சியத்தின் மற்றொரு பகுதியைக் கட்டுப்படுத்தினான்.[5]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Bhatia 1970, ப. 158.
  2. Majumdar 1977, ப. 445.
  3. Sharma 1975, ப. 124.
  4. Majumdar 1966, ப. 85-86.
  5. Bhatia 1970.

உசாத்துணை[தொகு]