இயல்பியம் (கலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காட்சிக் கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் இயல்பியம் (realism) என்பது, எவ்வித அழகூட்டலும், விளக்கும் முயற்சியும் இல்லாமல், அன்றாட வாழ்வில் காண்பது போல உலகப் பொருட்களை வெளிப்படுத்திக் காட்டுவது ஆகும்.

இயல்பியம் என்பது, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்பாட்டு இயக்கம் ஒன்றையும் குறிக்கும். பிரான்சில் தோன்றிய இந்த இயக்கம், 1800 களின் நடுப்பகுதியில் மிகவும் புகழ் பெற்ற கலை வடிவமாகத் திகழ்ந்தது. காண்பவற்றை அப்படியே படமாக்கித் தரும் புதிய கலையான நிழற்படக் கலையின் அறிமுகப்படுத்தப்பட்ட போது, காண்பது போலவே படங்களை உருவாக்கும் விருப்பு மக்களிடையே ஏற்பட்டது. இக்காலத்திலேயே இயல்பிய இயக்கம் உருவானது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இயல்பியம்_(கலை)&oldid=1664144" இருந்து மீள்விக்கப்பட்டது