இயற்கைக் காரணங்களால் மரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்கைக் காரணங்களால் ஏற்படக்கூடிய மரணமானது உடல் நலக்குறைவு மற்றும் அது தொடர்பான உபாதைகள் அல்லது நோய்த்தொற்று தவிர பிற வெளிப்புற காரணிகளால் உண்டாக்கப்படாத உடம்பின் உள் குறைபாட்டால் ஏற்படுகிறது. உதாரணமாக நுரையீரல் அழற்சி, வயிற்றுப்போக்கு அல்லது எயிட்சு (தொற்றுக்கள்), புற்றுநோய், பக்கவாதம் அல்லது இதயக் குழலிய நோய் (உள்புற உடல் குறைபாடுகள்) அல்லது திடீர் உறுப்புப் பழுது ஆகிய காரணங்களால் ஒரு மனிதன் இறக்கும் போது அவை பெரும்பாலும் இயற்கைக் காரணங்களால் இறந்ததாகவே குறிக்கப்படும். வயது மூப்பால் இறப்பதும் இவ்வாறு சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவ்வாறு குறிப்பிடுவதும் பிரச்சினைக்குரியதாக உள்ளது. இயற்கை மரணத்திற்கு வயது மூப்பு சாராத பல காரணங்களும் உள்ளன.[1]

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]