இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி
இன்சாட் (INSAT) அல்லது இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி என்பது தொடர்ச்சியான பல்வேறு பயன்பாடுகளை உடைய இஸ்ரோவினால் அனுப்பப்பட்ட நிலையான பூகோள செயற்கைக்கோள்கள் ஆகும். தொலைத்தொடர்பு, ஒளிபரப்பு, வானிலை, மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இன்சாட் செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டன.1983ல் ஆரம்பிக்கப்பட்ட இன்சாட் ஆனது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய உள்நாட்டு தகவல் தொடர்பு அமைப்பு ஆகும்.இது விண்வெளி துறை, தொலைத்தொடர்பு துறை, இந்திய வானிலை ஆய்வு துறை, அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இதில் உள்ள செயற்கைக்கோள்கள் அலைபரப்பி-பதில்அளிப்பானை (Transponder) கொண்டுள்ளன. இந்த அலைபரப்பிகள் வெவ்வேறு விதமான பட்டைகளில் இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தொலைக்காட்சி பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.ஒரு சில செயற்கைகோள்கள் மிக அதிக தெளிவுத்திறன் கொண்ட ரேடியோ மீட்டர் (VHRR), சிசிடி கேமராக்கள் ஆகியவற்றையும் வானிலை பயன்பாட்டிற்காக கொண்டுள்ளன.
[தொகு] இன்சாட் அமைப்பு
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்சாட்-1B செயற்கைக்கோள் ஏவுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1982 ல் அனுப்பட்ட இன்சாட்-1A ஆனது தோல்வியில் முடிந்தது. இன்சாட் அமைப்பு செயற்கைக்கோள்களானது இந்தியாவில் தொலைக்காட்சி, வானொலி, தொலைத்தொடர்பு மற்றும் வானிலை ஆராய்ச்சி துறைகளில் மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது எனலாம். இது தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கல்பனா-1 ஆனது வானிலைக்காக மட்டும் தனியே அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். ஹசன் மற்றும் போபாலில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் இன்சாட் செயற்கைக்கோள்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தற்போது 21ல் 11 செயற்கைகோள்கள் இயக்கத்தில் உள்ளன[1]
இன்சாட் செயற்க்கைக்கோள்களின் பட்டியலுக்கு இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியலை பார்க்கவும்.
[தொகு] மேற்கோள்கள்
.