இந்தோனேசியக் கடல் உலகம், ஜகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசியக் கடல் உலகம், ஜகார்த்தா
Map
திறக்கப்பட்ட தேதி1980
அமைவிடம்அன்கோல், வடக்கு ஜகார்த்தா, ஜகார்த்தா, இந்தோனேசியா
விலங்குகளின் எண்ணிக்கை3500+
உயிரினங்களின் எண்ணிக்கை500+
முக்கிய கண்காட்சிகள்8+
வலைத்தளம்www.ancol.com/seaworld

இந்தோனேசியக் கடல் உலகம் (Sea World Jakarta) அல்லது கடல் உலக அன்கோல் (Sea World Ancol) என்பது இந்தோனேசியாவின் ஜகார்த்தா, வடக்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு கடல்சார் அருங்காட்சியகம் ஆகும். இது ஒரு பிரதான தொட்டி, ஒரு சுறா தொட்டி மற்றும் பல தொட்டிகளைக் கொண்டு அமைந்துள்ளது, மேலும் அங்கு வெள்ளை முதலைகளும் கண்காட்சியில் உள்ளன. கடல் உலக அன்கோலின் முதன்மைத்தொட்டி தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நீர்வாழ் விலங்குகளை வளர்க்கின்ற தொட்டியாக அமைந்துள்ளது. இந்தோனேசியக் கடல் அருங்காட்சியகம் செப்டம்பர் 2014 இல் மூடப்பட்டது, ஆனால் மறுபடியும் 17 சூலை 2015 ஆம் நாள் முதல் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உரிமையாளர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய கடல் பூங்காவாக விரிவடையச் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.[1]

சிறப்பு[தொகு]

இந்தக் கடல் உலகத்தில் இந்தோனேசியாவின் கடல் முழுவதும் காணப்படுகின்ற சிறப்பு வாய்ந்த மற்றும் மாறுபட்ட நிலையில் அமைந்த வெப்பமண்டல கடல் வாழ்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு உயர் தொழில்நுட்ப நவீன பெரிய கடல் பூங்காவாக உள்ளது. அங்குள்ள நன்னீர் பகுதி உலகத்தில் நடந்து செல்லும்போதும் சிறிய உலகத்தில் நடந்து செல்லும்போது மிகவும் அழகான மீன் வகைகளைக் காண முடியும். டச்போல் என்கின்ற தொடுகுளத்தில் கடல்வாழ்வின் நெருக்கத்தினை மிகவும் எளிதாக உணர முடியும். கீழே குழாயின் வழியாக உள்ளே செல்லும் ஒரு திரையரங்கத் திரை போன்ற அமைப்பு கடலின் ஆழத்தில் நகர்கின்ற சூழலில் கடலின் அடியே காணப்படுகின்ற வாழ்க்கையின் இயற்கையான அனுபவத்தை முழுமையாக பார்வையாளர்கள் உணர முடியும். இந்த பெரிய காட்சியகம் அங்கே பார்வையிட வருகின்ற பார்வையாளர்களுக்கு 4,000 மீன் வகைகளையும், 300 இனங்களைச் சேர்ந்த சுறா வகைகளையும் காண முடியும். கடல் உலகத்தில் பல வகையான, கண்ணுக்கு விருந்தானவை காணப்படுகின்றன. அங்கு ஒரு டால்பின் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்தக் கண்காட்சி மிகவும் பிரபலமானதாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதிலும் பரந்து காணப்படுகின்ற பலவகையான கடல்வாழ் இனங்கள் இங்கு காட்சிக் கூடத்தில் காண முடியும். பார்வையாளர்களில் சிலர் இதனை செந்தோசாத் தீவு என அழைக்கப்படுகின்ற தீவினை விடவும் மிகவும் சிறப்பாகக் கருதுகின்றனர். செந்தோசாத் தீவானது சிங்கப்பூரில் அமைந்துள்ள மிகவும் புகழ் பெற்ற கேளிக்கைத் தீவாக அறியப்பட்ட இடமாகும்.[2] அத்தீவில் செந்தோசா கேளிக்கை உலகம் தவிர, 2 km (1.2 mi) நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை, 14 தங்கும் விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் அடங்கிய செந்தோசா கேளிக்கை உலகம் ஆகிய சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்ற இடங்கள் உள்ளன.

பூங்கா[தொகு]

இந்தோனேசியாக் கடல் உலகில் பின்வருபவை காட்சியில் உள்ளன.

  • முதன்மைத் தொட்டி - ஒரு உப்பு நீர் கொண்ட தொட்டியாகும். இது 36 x 24 மீட்டர் அளவில் 6 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியாகும். இந்தத் தொட்டியில் 5 மில்லியன் லிட்டர் உப்பு நீர் நிரப்பப்பட்டுள்ளது, மேலும் அங்கு 3500 வகையான கடல் விலங்குகள் வாழ்கின்றன.
  • சுறாத் தொட்டி - இந்தத் தொட்டி 7 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையைச் சேர்ந்த சுறாக்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த தொட்டியில், "சுறாவுக்கு உணவளிக்கவும்" என்ற வகையிலான பார்வையாளர்களை ஈர்க்கின்ற அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
  • நன்னீர் பகுதி - நன்னீர்ப் பகுதியில் பல சிறிய வகையிலான விலங்குகளான பிரன்ஹா, அராபைமா கிகாஸ் மற்றும் எலக்ட்ரிக் ஈல் போன்றவை காணப்படுகின்றன.மியாரோ
  • அன்டசேனா சுரங்கப் பாதை - முதன்மைத் தொட்டியின் உள்ளே 80 மீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப் பாதையைப் போன்ற ஓர் அமைப்பு காணப்படுகிறது. அதில் ஒரு தானியங்கி பயணிக்கும் அமைப்பு உள்ளது. மற்றும் அது வெளியில் கூரையால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான வசதிகள் உள்ளதால் பார்வையாளர்கள் நீரில் நனைந்து போகாமல், அதே சமயம் நீருக்கடியில் உள்ள இயற்கைத் தோற்ற உணர்வைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
  • கடல் பசுத் தொட்டி - இங்தத் தொட்டியில் ஆவுளியா என அழைக்கப்படுகின்ற ஒரு வகையான கடல் பசுக்கள் காணப்படுகின்றன.
  • சுற்றுச்சூழல் அமைப்பு தொட்டி - சுற்றுச்சூழல் அமைப்பிற்காக அமைந்துள்ள தொட்டி கடற்பாசி, பவளம், மற்றும் க்ளோன்ஃபிஷ் மற்றும் குப்பீஸ் போன்ற சிறிய கடல் விலங்குகள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது.
  • ஆழ்கடல் பகுதி - இந்த ஆழ்கடல் பகுதி ஆழ்கடல் விலங்குகளைக் கொண்டு அமைந்துள்ளது. அவற்றில் பாதுகாக்கப்பட்ட ஆழ்கடல் விலங்குகள் காணப்படுகின்றன. அவை கண்ணாடிக் குழாயில் வைக்கப்பட்டு காட்சிக்கு உள்ளன.

பார்வையாளர் நேரம்[தொகு]

இந்தோனேசியக் கடல் உலகம் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும் நடுப்பகல் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.[2] இந்தக் கடல் உலகத்தைப் பார்வையிடுவதற்கான நுழைவு கட்டணம் வார நாட்களில் 50,000 ஐடிஆர் ( 5 அமெரிக்க டாலர் ) மற்றும் வார இறுதிகளில் 60,000 ஐடிஆர் ( 6 அமெரிக்க டாலர் ) ஆகும்.

அன்கோல் ட்ரீம்லேண்ட்[தொகு]

இதைப் போலவே இந்தோனேசியாவில் அமைந்துள்ள மற்றொரு கடல்சார் அருங்காட்சியகம் அன்கோல் ட்ரீம்லேண்ட் என்பதாகும். அது இந்தோனேசியாவில் படேமங்கான் என்னுமிடத்திலுள்ள அன்கோல் கேலுராகான் என்னுமிடத்தில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Ancol to Build World's Largest SeaWorld Park in Two Years' Time". Tempo. https://en.tempo.co/read/news/2017/05/25/199878601/Ancol-to-Build-Worlds-Largest-SeaWorld-Park-in-Two-Years-Time. பார்த்த நாள்: 2017-06-18. 
  2. 2.0 2.1 "Sea World". Archived from the original on 2019-11-24. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.