இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1961
தலைமையகம்புது தில்லி
ஐதராபாத்
குர்கான்
ரிசிகேசு
உற்பத்திகள்மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள்
இணையத்தளம்Official website

இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் (Indian Drugs and Pharmaceuticals Limited (IDPL) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை மருந்து நிறுவனமாகும். இது மருந்து உற்பத்தி மற்றும் மருந்து கண்டுபிடிப்பு செய்வதாற்காக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும். இது புது தில்லியைத் தலைமையிடமாக்கொண்டும், மற்றும் ஐதராபாத், குர்கான், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் ஆலைகளை அமைந்துள்ளது.[1][2] இந்நிறுவனம், மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையில் மருந்துகள் வழங்க காப்புரிமை வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது, மற்றும் அண்மையில் இது தன்னிச்சையாக மூன்று மருந்துகளை வெளியிட்டுள்ளது.[3][4] 1979 ஆம் ஆண்டு இந்நிறுவனம் லாபம் ஈட்டியது. அதற்குப் பிறகு இறங்குமுகம்தான். 2013-14 ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நஷ்டம் ரூ.171 கோடியாகும். விற்பனை வருமானம் ரூ. 60 கோடியாகும். இந்நிலையில் 2016 திசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் குழு இந்தியாவில் மொத்தம் உள்ள 5 அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வருவாயின்றி இயங்கும் நான்கு நிறுவனங்களை மூடிவிட ஒப்புதல் அளித்துள்ளது. மூட ஒப்பதல் அளிக்கப்பட்ட நிறுவனங்களில் இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட் நிறுவனமும் அடங்கும். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://pharmaceuticals.gov.in/cpsu.pdf
  2. "The Hindu : Andhra Pradesh News : Plea to allot IDPL quarters to retrired staff". Archived from the original on 2020-04-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "IDPL Introduces Three New OTC Drugs - Pharmaceuticals & Healthcare Insight". Archived from the original on 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
  4. "Department of Chemicals and Petrochemicals-Ministry of Chemicals and Fertilizers-Pharmaceuticals". Archived from the original on 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
  5. "இந்த நோய்க்கு மருந்து எங்கிருக்கிறது?". கட்டுரை. தி இந்து. 30 சனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2017.