இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம்
வகை | பொது / ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1941 |
பணிப்பாளர் | முனைவர் ஸ்ரீனிவாச ரெட்டி |
நிருவாகப் பணியாளர் | 250 |
அமைவிடம் | , சம்மு காசுமீர் (ஒன்றியப் பிரதேசம்) , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | தன்னாட்சி |
இணையதளம் | http://www.iiim.res.in/index.php |
இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (Indian Institute of Integrative Medicine), இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் ஜம்முவில் அமைந்துள்ள ஒரு முதன்மை ஆய்வு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஆய்வகங்கள்[தொகு]
இந்நிறுவனத்தில் கீழ்கண்ட ஆய்வுக் கூடங்கள் உள்ளன.[1]
- இயற்கைப் பொருட்கள் & மருத்துவ வேதியியல்
- நொதித்தல் & நுண்ணுயிரி தொழினுட்பம்
- புற்றுநோய் மருந்தியல் துறை
- தரக்கட்டுப்பாடு & எந்திரவியல் துறை
- தாவரவியல் & பயிர்தொழிற்நுட்பத் துறை
- தொற்றுநோய் பிரிவு
- கலவை & மருந்து வழங்கல் துறை
- மருந்தியல் துறை
- மருந்துச்செயல்பாடு & நச்சுயியல் & கலவை துறை