இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2021
இங்கிலாந்துப் பெண்கள் அணி
இந்தியப் பெண்கள் அணி
காலம் 16 ஜூன் 2021 – 15 சூலை 2021
தலைவர்கள் ஹெதர் நைட் மிதாலி ராஜ்(பெண்கள் தேர்வுப் போட்டி மற்றும் பெண்கள் ஒருநாள் தொடர்)

ஹர்மன்பிரீத் கவுர்(பெண்கள் இருபது20 தொடர்)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 1-ஆட்டத் தொடர் 0–0 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் ஹெதர் நைட் (95) சஃபாலி வர்மா (159)
அதிக வீழ்த்தல்கள் சோஃபி எக்ஹல்ஸ்டோன் (8) சினேஹ் ராணா (4)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்துப் பெண்கள் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் நாட் சிவர் (142) மிதாலி ராஜ் (206)
அதிக வீழ்த்தல்கள் சோஃபி எக்ஹல்ஸ்டோன் (8) ஜுலான் கோஸ்வாமி(3)

பூனம் யாதவ் (3)
தீப்தி சர்மா(3)

இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி , இங்கிலாந்து அணியுடன் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, இந்த சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஜூன் 2021 இல் தொடங்க உள்ளது.[1] அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா , இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் என்று கூறினார். [2][3] இந்திய அணி இறுதியாக 2014 நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினர்.[4]

பின்னணி[தொகு]

முதலில், இந்தச் சுற்றுப்பயணம் ஜூன் மற்றும் ஜூலை 2020 இல் நடைபெற திட்டமிடப்பட்டது.[5] இந்த சுற்றுப்பயணத்தில் நான்கு ஒருநாள் மற்றும் இரண்டு இருபது -20 போட்டிகளாக நடைபெற இருந்தன. [6] இருப்பினும், ஏப்ரல் 24, 2020 அன்று, கோவிட் தொற்றுநோய் காரணமாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம் துடுப்பாட்டத்திற்குத் தடை விதித்ததனால்[7] இந்தச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. [8] மே 2020 இல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியத்தின் இயக்குனர் கிளேர் கானர், 2020 செப்டம்பரில் சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணியுடன் முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்கலாம் என்று பரிந்துரைத்தார்.[9][10] இருப்பினும், 2020 ஜூலை 20 ஆம் தேதி, இந்தியாவில் தொற்றுநோயின் தாக்கத்தால் இந்தியா சுற்றுப்பயணம் செய்யவில்லை .[11]

இறுதியாக, 2021-ஆம் ஆண்டின் சூன், மற்றும் சூலை மாதங்களில் 1 பெண்கள் தேர்வுப் போட்டி , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 பெண்கள் இருபது20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றை இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது .

மேற்கோள்கள்[தொகு]

  1. "India set to play a Test against England this year; match likely during their proposed England tour". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
  2. "India Women to play Test against England this year, says BCCI secretary Jay Shah". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
  3. "England to play 'one-off Test' against India this year - BCCI". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
  4. "India Women to play a Test against England in 2021, confirms Jay Shah". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
  5. "Women's T20 World Cup a chance for England to 'put a few things to right' - Natalie Sciver". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
  6. "England Women announce T20 World Cup squad and summer fixtures". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
  7. "ECB announces further delay to the professional cricket season". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
  8. "Season delayed until July as England-West Indies postponed". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
  9. "England women: India & South Africa tri-series an option - Clare Connor". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.
  10. "England women could follow men into training within weeks". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.
  11. "Covid-19: India women set to pull out of England tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.