இதய உடலியங்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதய உடலியங்கியல் அல்லது இதய உடற்றொழிலியல் என்பது ஆரோக்கியமான இதயம் ஒன்று எவ்வாறு செயற்படுகின்றது என்பதைப் பற்றிய கல்வியாகும். இதில் குருதியோட்டம், இதயத்தசையின் கட்டமைப்பு, இதய மின்கடத்துகை ஒருங்கியத்தின் செயற்பாடு, இதய வட்டம், இதய வெளியேற்றக்கொள்ளளவு, இவை எவ்வாறு ஒன்றுக்கொன்று தங்கியுள்ளது என்பவை அடங்கும். தொடர்ச்சியான குருதியின் சுற்றோட்டத்திற்கு இதயம் ஒரு பாய்வு எக்கி போன்று தொடர்ச்சியாகச் செயற்படுகின்றது. இதயத்தசையின் விசேட அமைப்பு இதற்கு உதவியாக உள்ளது. மின்கடத்துகை ஒருங்கியத்தில் சிரைப்பைச்சோணைக் கணுவில் தொடங்கும் மின்சமிக்ஞைக் கணத்தாக்கவிசை காரணமாக இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு மின்னோட்டம் மூலம் சமிக்ஞை அனுப்பப்பட்டு இதயத்தசை சுருங்குகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gray's Anatomy. CHURCHILL LIVINGSTONE ELSEVIER. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2371-8. பார்க்கப்பட்ட நாள் March 1, 2017. {{cite book}}: Unknown parameter |Edition= ignored (|edition= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_உடலியங்கியல்&oldid=3581363" இலிருந்து மீள்விக்கப்பட்டது