இசுபிரிட் தளவுளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுபிரிட் தளவுளவி
Spirit rover
NASA Mars Rover.jpg
செவ்வாய்க் கோளில் தளவுளவி
இயக்குபவர் நாசா
திட்ட வகை தளவுளவி (Rover)
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் ஜனவரி 4, 2004இல் தரையிறங்கியது.
தே.வி.அ.த.மை எண் 2003-027A
இணைய தளம் JPL's Mars Exploration Rover home page
ஸ்பிரிட் தளவுளவி செவ்வாயில் தரையிறங்கிய பகுதி
ஸ்பிரிட் தளவுளவியினால் அனுப்பப்பட்ட முதலாவது வண்ணப் படம்

இசுபிரிட் (MER-A, Mars Exploration Rover - A), என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுளவிகளில் (rover) முதலாவதாகும். இது ஜனவரி 4, 2004 இல் செவ்வாயில் 90 மைல் அகண்ட கூஸிவ் குழியில் ('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு தளவுளவியான ஆப்பர்சூனிட்டி தளவுளவி (Oppportunity Rover) இது தரையிறங்கிய இடத்துக்கு மறுபுறத்தில் மெரிடியானி பீடத்தில் (Meridiani Planum) தரையிறங்கியது.

நாசா திட்டவியலாளர்கள் எதிர்பார்த்தமையை விட 15 மடங்கு அதிக நேரம் ஸ்பிரிட் தளவுளவி செயற்பட்டது. இதனால் அது செவ்வாய்க் கோளின் பாறைகளைப் பற்றிய நிலவியல் (geology), மற்றும் கோளின் மேற்பரப்பு பற்றியும் விரிவாக ஆய்வு நடத்த முடிந்தது. இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது (2008).

நீருக்கான ஆதாரங்கள்[தொகு]

இரண்டு ஆண்டுகளில் ஸிபிரிட் தளவுளவி சுமார் 70,000 படங்களை அனுப்பியுள்ளது. அதன் படி செவ்வாய்த் தளத்தில் ஹம்ப்ரீ என்ற பாறையில் நீர் இருந்ததற்குச் சான்றுகள் காட்டியிருப்பதாக மார்ச் 5, 2004 இல் நாசா அறிவித்தது[1].

பொனெவில் குழி[தொகு]

மார்ச் 11, 2004 இல், 400-yard (370 மீ) பயணத்தின் பின்னர் ஸ்பிரிட் தளவுளவி பொனெவில் குழியை (Bonneville crater) அடைந்தது. இக்குழி 150 yards (140 மீ) அகலமும் 30 yards (27 மீ) ஆழமும் கொண்டது. ஆனால் இக்குழி ஒரு முக்கியத்துவமும் இல்லாத காரணத்தால் ஸ்பிரிட் இக்குழியினுள் இறங்கவில்லை. மாறாக அது தென்மேற்குப் பகுதியாக நகர்ந்து கொலம்பியா குன்றுகளை நோக்கிச் செலுத்தப்பட்டது.

Bonneville Crater.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுபிரிட்_தளவுளவி&oldid=1608287" இருந்து மீள்விக்கப்பட்டது