ஆளுநர் மாளிகை, பெசாவர்

ஆள்கூறுகள்: 34°00′33″N 71°33′23″E / 34.009083°N 71.556442°E / 34.009083; 71.556442
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆளுநர் மாளிகை
Governor's House
ஆளுநர் மாளிகை, பெசாவர் is located in பாக்கித்தான்
ஆளுநர் மாளிகை, பெசாவர்
Location of ஆளுநர் மாளிகை
Governor's House in பாக்கித்தான்
அமைவிடம்பெசாவர்
ஆள்கூற்றுகள்34°00′33″N 71°33′23″E / 34.009083°N 71.556442°E / 34.009083; 71.556442

பெசாவர் ஆளுநர் மாளிகை (Governor's House, Peshawar) பாக்கித்தான் நாட்டின்]] கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரமான பெசாவர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் ஆகும். இங்குள்ள இடது பக்க பள்ளிவாசலில் இருந்து தற்போது பூங்காவாக உள்ள பாலா இசார் கோட்டை வரை சுமார் 1.25 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு ரகசிய சுரங்கப்பாதை உள்ளது.  பெசாவர் அருங்காட்சியகத்திற்கு அருகில் ஆளுநர் மாளிகை உள்ளது. கைபர் பக்துன்க்வாவின் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் செயல்படுகிறது. [1]

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் கவர்னர் மாளிகை அமைக்கப்பட்டது. மர்தான்-சித்ரல் சாலை (லோவாரி கணவாய்), அட்டாக் லாண்டி கோட்டல் இரயில் பாதை, துரோசு கோட்டை ஆகியவற்றுக்கு பொறுப்பான பத்ராசி நகரத்தின் பிரபல பிரித்தானிய ஒப்பந்ததாரர் கான் பகதூர் நவாப் அப்துல் அமீத் கான் இந்த மாளிகையைக் கட்டினார். இந்தியா முழுவதும் கட்டப்பட்ட பிரித்தானிய கட்டிடங்கள் போல பாரம்பரிய கிரேக்க-ரோமன் வடிவமைப்பில் கட்டடத்தை கட்டுவதற்காக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ali, Zulfiqar (March 20, 2016). "Governor's House a burden on exchequer". DAWN.COM.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுநர்_மாளிகை,_பெசாவர்&oldid=3746053" இலிருந்து மீள்விக்கப்பட்டது