ஆலன் கீத் டேவிட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலன் கீத் டேவிட்சன்
Alan Davidson
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆலன் கீத் டேவிட்சன்
பிறப்பு14 சூன் 1929 (1929-06-14) (அகவை 94)
இலிசாரோவ். நியூசவுத் வேல்சு, ஆத்திரேலியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை fast-medium
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 195)11 சூன் 1953 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு20 பிப்ரவரி 1963 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1949–1963நியூ சவுத் வேல்சு துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுத் துடுப்பாட்டம் முதல் தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 44 193
ஓட்டங்கள் 1,328 6,804
மட்டையாட்ட சராசரி 24.59 32.86
100கள்/50கள் 0/5 9/36
அதியுயர் ஓட்டம் 80 129
வீசிய பந்துகள் 11,587 37,704
வீழ்த்தல்கள் 186 672
பந்துவீச்சு சராசரி 20.53 20.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
14 33
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 2
சிறந்த பந்துவீச்சு 7/93 7/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
42/– 168/–
மூலம்: Cricinfo, 26 டிசம்பர் 2008

ஆலன் கீத் டேவிட்சன் (Alan Keith Davidson, பிறப்பு 14 ஜூன் 1929) 1950 மற்றும் 1960 களின் முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். அவர் ஒரு பன்முக வீரராக இருந்தார் . அதிரடி இடது கை மட்டையாளர் மற்றும் விரைவு வீச்சாளர் ஆவார். ஆறு அடி உயர்ம் கொண்ட இவர் அதிரடியாக ஓட்டங்களைச் சேர்ப்பதன் மூலமும் ஆறுகள் அடிக்கும் திறனுக்காகவ்ம் இவர் பரவலாக அறியப்பட்டார். இவரது இடது கை பந்துவீச்சு 1950 கள் மற்றும் 1960 களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து தாக்குதல் பாணிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது, மேலும் 1950 களின் பிற்பகுதியிலிருந்து உலகின் மிகச்சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்பட்டது.[1] இடதுகை விரைவு வீச்சாளர்கள் வரலாற்றில் இரு வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அதில் மற்றொருவர் வசிம் அக்ரம் ஆவார்.ஒரு நிறைவில் இரு ஓட்டங்களுக்கும் ஓட்டங்களைக் கொடுத்தவர் எனும் சராசரியினை வைத்துள்ளார்.[2] போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்த இரண்டு பந்து வீச்சாளர்கள் மட்டுமே சிறந்த பந்துவீச்சு சராசரியைக் கொண்டுள்ளனர் .[3] சாத்தியமில்லாத குறைந்த தூரத்தில் வரும் கேட்சுகளை பிடிக்கும் அவரது திறனால் இவர் "தி க்ளா" என்ற புனைப்பெயரைப் பெற்றார்.[4] இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அனிக்காக தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தொழில்[தொகு]

நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் 1949-50 பருவத்தில் அறிமுகமானார். தனது முதல் தொடரில் 26 இழப்புகளைக் கைப்பற்றினார்.நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற போட்டியில் இவர் 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 10 இழப்புகளைக் கைப்பற்றினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 157 ஓட்டங்களை எடுத்தார்.

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

லெஸ்லி கீத் டேவிட்சன் மற்றும் ஹில்டா அய்லின் கிளிப்டன் ஆகியோரின் மகனான இவர்,[5] மத்திய கடற்கரையில் கோஸ்ஃபோர்ட் நகருக்கு அருகிலுள்ள நியூ சவுத் வேல்ஸ், லிசாரோவில் வளர்ந்தார். அவர் தனது குடும்பத்தின் கிராமப்புற சொத்துக்களில் ஒன்றான மலையிலிருந்து தோண்டிய ஆடுகளத்தில் துடுப்பாட்டம் விளையாட கற்றுக்கொண்டார். ஒன்பது வயதிற்குள், அவர் கோஸ்போர்ட் தரப் போட்டியின் இரண்டாவது பிரிவில் விளையாடிக் கொண்டிருந்தார். தனது உயர்நிலைப் பள்ளி ஆண்டுகளில், மாநிலத்தின் வடக்கு உயர்நிலைப் பள்ளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பொதுப் பள்ளிகளின் போட்டியில் துடுப்பாட்டம் விளையாடினார்.அங்கு இவரின் வருங்கால தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் ரிச்சி பெனோட், சிட்டி உயர்நிலைப் பள்ளித் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கினார்.[1] தனது டீன் ஏஜ் பருவத்தில், டேவிட்சன் குடும்பச் சொத்தில் வேலை செய்வதன் மூலமும், விறகு வெட்டுவதன் மூலமும், பண்ணைப் பொருட்களை எடுத்துச் செல்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டார்.[6]

டேவிட்சன் முதலில் இடது கை வழமையில்லாச் சுழற்சியை வீசினார், ஆனால் அவரது மாமாவின் அணியில் விரைவு வீச்சாளர் இல்லாததால் இவர் விரைவாக வீசத் துவங்கினார்.[1] 1948-49ல், அவர் சிட்னிக்குச் சென்று வடக்கு மாவட்ட துடுபாட்ட சங்கங்களில் சேர்ந்தார். தனது இளமை பருவத்தில் திறமையான ரக்பி லீக் வீரரான இவர், தனது உடற்தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள மேற்கு மாவட்ட கால்பந்து கிளப்பில் பயிற்சி பெற்றார்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Wisden 1962 – Alan Davidson". Wisden. 1962. பார்க்கப்பட்ட நாள் 2007-04-11.
  2. "A captain's dream". Cricinfo. 14 June 2003. பார்க்கப்பட்ட நாள் 2007-04-11.
  3. "Test matches:Best career bowling average". Cricinfo. 2007. Archived from the original on 29 January 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-10-29.
  4. Cashman; Franks; Maxwell; Sainsbury; Stoddart; Weaver; Webster (1997). The A-Z of Australian cricketers. Melbourne: Oxford University Press. பக். 72–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-550604-9. 
  5. Who's Who in Australia 2009. Crown Content. 2008. 
  6. Haigh, p. 31.
  7. Pollard, Jack (1969). Cricket the Australian Way. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_கீத்_டேவிட்சன்&oldid=3765938" இலிருந்து மீள்விக்கப்பட்டது