ஆண்ட்ரியூ கோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்ட்ரியூ கோகன் சென்னையை ஆண்ட ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் முதல் முகவர் ஆவார். சென்னை பீடா வெங்கட ராயா எனும் அரவிந்து வம்சத்தைச் சேர்ந்த கடைசி விஜயநகர மன்னனிடமிர்ந்து வாங்கப்பட்டது, அப்போது இவர் தான் மாசுலிபட்டினம் தொழிற்சாலையின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் சந்திரகிரி தலைமையிடமாகக்கொண்டு நிகழ்த்தப்பட்ட அந்த முயற்சியில் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் இருந்தார்.

சென்னை வாங்கப்பட்டது:[தொகு]

1637 ஆம் ஆண்டில், மாசுலிபட்டினம் சபையின் உறுப்பினருமான, அர்மகான் தொழிற்சாலை தலைவருமான பிரான்சிஸ் டே என்பவர், கோரமண்டல் கடற்கரை முதல் பாண்டிச்சேரி வரை ஆய்வு செய்ய ஒரு பயணத்தை மேற்கொண்டார். அந்த சமயம் கோரமண்டல் கடற்கரை சந்திரகிரியின் ராஜாவால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகட்டிலிருந்து சாந்தோம் வரையிலான கடற்கரை டமர்லா வெங்கடபதி நாயக் என்பவரால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. இவர் வந்தவாசியிலும், ஐயப்ப னாயக் எனும் இவரின் சகோதரர் பூந்தமல்லியிலும் தங்கியிருந்தனர்.

ஐயப்ப நாயர் என்பவர் தான் ஆங்கிலேயருக்கு ஜார்ஜடவுன் எனும் இடத்தினை பிரித்து வரையறை செய்ய கருத்துருக்களை சொன்னதாகக் கருதப்படுகிறது. கோகன் முன்மொழியப்பட்ட தளத்தை விசாரித்து, வர்த்தக வாய்ப்புகளை ஆய்வு செய்தார். அவரிடம் பிரான்சிஸ் டே கலந்துரையாடினார். இந்த பேச்சுவார்த்தையின் விளைவுகள் சாதகமாக இருந்தன. பிரான்சிஸ் டே இதனால் மதராசப்பட்டினம் எனும் கிராமத்தை இரண்டு வருட காலங்களுக்கு ஆங்கிலேயருக்கு தர சம்மதித்தார். 1639ல் மாசுலிப்பட்டினம் மற்றும் பன்டம்(ஜாவாவில்) எனும் இடங்களில் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், சென்னை மாகாணத்திற்கான தீர்வு தொடங்கியதும் நில ஒப்பந்தம் கையெழுத்தானது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கட்டுமானம்[தொகு]

பிரான்சிஸ் டேவும், கோகனும் தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கட்டுமானத்திற்கு பொறுப்பு வகித்தவர்கள். 1640 மார்ச் 1 ம் தேதி தொழிற்சாலை மாளிகை கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி அந்த ஆண்டின் செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று (ஏப்ரல் 23ம் நாள்) கட்டிமுடிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அந்த கோட்டைக்கு "செயின்ட் ஜார்ஜ் கோட்டை" எனும் பெயரும் சூட்டப்பட்டது.

அங்கு கொத்தளங்கள் தான் முதலில் கட்டப்பட்டன. அதன் பின் படிப்படியாக நிதி ஒதுக்கப்பட்டு அதற்கு ஏற்ப திரைச் சுவர்கள் எழுப்பப்பட்டது. அந்த ஒட்டுமொத்த கோட்டை கட்டி முடிக்கப்பட பதினான்கு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இறுதியாக 1653ம் ஆண்டு தான் அந்தப் பணி நிறைவடைந்து இருக்கிறது.

கோகனின் நிறுவனம்[தொகு]

புனித ஜார்ஜ் கோட்டையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே, பிரான்சிஸ் டே தனது தாய் நிறுவனத்திற்கு வெளியே தனிப்பட்ட முறையில் வர்த்தகம் மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டினால் 1641ல் அவர் இங்கிலாந்திற்கு சென்றார்.

அவர் இல்லாத சமயத்தில், கோகன் தான் சென்னையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்தார். அதிகாரத்தில் இருந்த சமயத்தில் அவர் அரண்மனையை வலுப்படுத்தி, நகரத்தை வளமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவர் கோட்டையின் மீது மிகுந்த செலவின விதிகளை விதித்தார். இதன் விளைவாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட வெறுப்பினால் இங்கிலாந்திற்கே மீண்டும் சென்று விட்டார். இந்த மாற்றங்களால் பிரான்சிஸ் டே தன்னை சென்னையின் பொறுப்பாளராக உருவகப்படுத்திக் கொண்டு சில காலம் வரை அவர் ஒரு சென்னையின் பொறுப்பாளராகவே செயல்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரியூ_கோகன்&oldid=3169367" இலிருந்து மீள்விக்கப்பட்டது