ஆடு வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆட்டுக்கிடாய் வாகனம்
ஆட்டுக்கிடாய் வாகனம்
ஆட்டுக்கிடாய் வாகனம்
உரிய கடவுள்: முருகன், அக்னி
வேறு பெயர்கள்: ஆட்டுக் கடா வாகனம்
ஆடு வாகனம்
மேச வாகனம்
செங்காட்டுக்கிடா வாகனம்

ஆடு வாகனம் என்பது இந்து சமயத்தில் பல கடவுள்களுக்கு வாகனமாக உள்ளது. கௌமார முழுமுதற் கடவுளான முருகப்பெருமான் வாகனமாக கோயில்களில் ஆடு வாகனம் உலா செல்ல பயன்படுத்தப்படுகிறது. அக்னி, துர்க்கை அம்மன் ஆகியோருக்கு ஆடு வாகனமாக புராணங்களில் கூறப்படுகிறது.

வாகன அமைப்பு[தொகு]

ஆடு வாகனமானது நின்ற நிலையில் உள்ளது. வாகனத்தின் மேல் உற்சவரை அமர்த்த ஏதுவாக தாங்கு பலகை அமைக்கப்படுகிறது.

ஆடு வாகன காரணம்[தொகு]

அந்தணர், இந்திரன், அருந்தவர், அரன், அரி ஆகியோர் சிவபெருமானுக்காக பூமியில் இடத்தை தேர்ந்தெடுத்து யாகம் செய்தனர். அந்தணர்கள் கவனக்குறைவால் மந்திர உச்சரிப்பு மாறுபட்டது. உடனே யாகத்திலிருந்து செவ்வானம் போன்ற நிறத்துடன் ஓர் ஆட்டுக் கடா எழுந்தது. எதிர்வந்தோரை கொன்றது. வானத்திற்கு பறந்து சந்திரனின் தேரை உடைத்தது, பிரம்மலோகம் போன்ற இடங்களில் ஆட்டுக்கிடாவை கண்டு அஞ்சினர். [1]

தங்களை காக்க வேண்டும் என கயிலாயத்தில் முருகப்பெருமானிடம் முறையிட்டனர். முருகப்பெருமான் வீரபத்திரரிடம் ஆட்டுக்கிடாவை பிடித்துவர சொன்னார். வீரபத்திரர் சென்று ஆட்டுகிடாவை பிடித்து முருகனிடம் தந்தார்.

மேச வாகனத்தில் அக்னி
நெருப்பில் உதித்து அங்கண் புவனம் அழித்துலவும்
செங்கட் சிடா அதனை சென்று சென்று கொணர்ந்து
அதன் மீது இவர்ந்து எண்திக்கும் விளையாடும் நாதா.
- கந்தர் கலி வெண்பா.

கோயில்களில் உலா நாட்கள்[தொகு]

  • திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் உலா வருகிறார். [2]
  • மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவில் ஆட்டுக்கிடாய் வாகனம் பயன்படுத்தப்படுகிறது. [3]

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "முருகனுக்கு ஆடு வாகனம் வந்தது எப்படி?". Dinamalar.
  2. https://m.dinamalar.com/detail.php?id=3255942
  3. "மயிலத்தில் பங்குனி உத்திரத் திருவிழா... மார்ச் 27-ம் தேதி திருத்தேர்!". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |website= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடு_வாகனம்&oldid=3711885" இலிருந்து மீள்விக்கப்பட்டது