அவனி தாவ்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவனி தாவ்தா, இந்தியாவின் மும்பையை சேர்ந்த வணிக நிர்வாகியும், இளம் வயதிலேயே தலைமை நிர்வாக அதிகாரியுமானவர். டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், முப்பத்து மூன்றாவது வயதிலேயே டாடா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து, இளம் வயதிலேயே டாட்டா குழுமத்தின் தலைவரான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். [1] 2014 ஆம் ஆண்டில், பார்ச்சூன் இதழ் வெளியிட்ட உணவு மற்றும் பிற பானங்கள் நிறுவனங்களில் மிகவும் புதுமையான பெண்கள்' என்ற பட்டியலில் பதிமூன்றாம் இடத்தைப் பிடித்தார். [2]

தொழில் வாழ்க்கை[தொகு]

அவனி , ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் மற்றும் டாடா குளோபல் பீவரேஜஸ் லிமிடெட் (டிஜிபிஎல்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் நிறுவப்பட்ட டாடா ஸ்டார்பக்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2015 ஆம் ஆண்டு வரை இருந்து, அந்நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். [3] [4] 2015 ஆம் ஆண்டிலிருந்து, 2019 ஆம் ஆண்டு வரை கோத்ரெஜ் நேச்சர் பாஸ்கெட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார். [5] தற்போது, ​​அவர் பெயின் அட்வைசரி நெட்வொர்க்கில் மூலோபாய ஆலோசகராக உள்ளார்.

பெருமைகள்[தொகு]

2013 ஆம் ஆண்டில் ஃபார்ச்சூன் அமெரிக்கா பதிப்பு பத்திரிகையில் வெளியான  நாற்பது வயதிற்குட்பட்ட தலைவர்கள்' என்ற வருடாந்திர உலகளாவிய பட்டியலிலும்  2014 ஆம் ஆண்டில் ஃபார்ச்சூன் உணவு பத்திரிகையின் உணவு மற்றும் பானத்தில் மிகவும் புதுமையான இருபத்தைந்து பெண்கள்' பட்டியலில் பதின்மூன்றாம் இடத்திலும் பெயரிட்டுள்ளார்,இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்தியப் பெண் அவனி ஆவார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள உலகப் பொருளாதார மன்றத்தால் 2014 ஆம் ஆண்டில் உலகளாவிய இளம்  தலைவராகவும் இவர் பரிந்துரைக்கப்பட்டார். [6]

கல்வி[தொகு]

அவனி, இந்தியாவின் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகபிரிவில் (விளம்பரம் மற்றும் ஊடகம்) இளங்கலை பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தின் நர்சி மோன்ஜீ மேலாண்மை படிப்புகள் நிறுவனத்தில் முதுகலை மேலாண்மை ஆய்வுகள் (எம்எம்எஸ்) பட்டமும் பெற்றவர். இரண்டிலுமே தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவனிக்கு விஷால் என்ற தொழிலதிபருடன் திருமணமாகி ஒரு மகனும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coffee with BS: Avani Saglani Davda, Tata Starbucks". Business Standard India. March 2013. http://www.business-standard.com/article/opinion/coffee-with-bs-avani-saglani-davda-ceo-tata-starbucks-113030100554_1.html. 
  2. "Business News Today: Read Latest Business news, India Business News Live, Share Market & Economy News".
  3. Alves, Glynda. "Meet Avani Davda, the youngest CEO in Tata Group - The Economic Times". The Economic Times (economictimes.indiatimes.com). http://economictimes.indiatimes.com/magazines/panache/meet-avani-davda-the-youngest-ceo-in-tata-group/articleshow/39280677.cms. பார்த்த நாள்: 2014-08-21. 
  4. "Hottest Young Executives: Avani Davda's meteoric rise at Tata Starbucks - Business Today". businesstoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
  5. Gupta, Saumya (2017-12-08). "Avani Davda: Scaling back for more". Mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  6. "Avani Davda". Persistent Systems (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவனி_தாவ்தா&oldid=3681614" இலிருந்து மீள்விக்கப்பட்டது