அல்வால் ஏரி

ஆள்கூறுகள்: 17°30′28″N 78°30′41″E / 17.50778°N 78.51139°E / 17.50778; 78.51139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்வால் ஏரி
Alwal lake
அல்வால் செருவு
அமைவிடம்ஐதராபாத்திற்கு அருகில்
ஆள்கூறுகள்17°30′28″N 78°30′41″E / 17.50778°N 78.51139°E / 17.50778; 78.51139
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
குடியேற்றங்கள்செகந்திராபாத், ஐதராபாத்து, இந்தியா

அல்வால் ஏரி (Alwal Lake) இந்தியாவின் ஐதராபாத் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு செயற்கை ஏரியாகும். செகந்திராபாத் நகரத்திற்கு வடக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்வால் பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. அல்வால் ஏரி தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால் அல்வால் நகராட்சி அலுவலர்களுக்கு எப்போதுமே ஒரு பதட்டமான சூழல் நிலவிவருகிறது [1][2].

அமைவிடம்[தொகு]

செகந்திராபாத்-மும்பை இரயில் பாதையில் அமைந்திருக்கும் அல்வால் நகரத்தின் மையத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. இரயில் பாதையிலிருந்தும் அல்வால் இரயில் நிலையத்திலிருந்தும் ஒரு அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த ஏரியின் வழியாக செல்லும் பாதையின் வழியாகச் சென்றால் முழுமையான மற்றும் நெருக்கமான ஏரியின் தோற்றத்தை காணமுடியும்.

பயன்[தொகு]

இந்த ஏரி பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. கணேச சதுர்த்தி காலத்தில், கணேசரின் சிலைகளும் ஏரிக்குள் மூழ்கவைக்கப்படுகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்த அந்த நேரத்தில் ஏரி அருகே உள்ள சாலை முழுவதும் கூடுதல் விளக்குகள் மற்றும் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஏரிக்கு அருகில் பல பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன. மாலை நேரத்தில் இது ஏரிக்கு மேலும் அழகைக் கொடுக்கிறது.

மேலும் வாசிக்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்வால்_ஏரி&oldid=2902519" இலிருந்து மீள்விக்கப்பட்டது