அரோமாட்டிக் ஐதரோகார்பன்
அரோமாட்டிக் ஐதரோகார்பன் (aromatic hydrocarbon) அல்லது அரீன் (arene) என்பது ஒரு ஹைடிரோகார்பன் (கரிம நீரதை)ப் பொருள். இதன் மூலக்கூறு, கரிம அணுக்களால், சமதளத்தில் அறுகோண வளையமாக அல்லது வளையங்களாக அமைந்து ஓரிடப்படா எதிர்மின்னிகளால் இணைப்புண்ட வேதிப்பொருள். இப்பொருட்கள் ஒருவகையான இனியமணம் கொண்டிருப்பதால் இவைகளுக்கு அரோமாட்டிக் (அரோமா (aroma) = மணம்) ஹைடிரோகார்பன் என்று பெயர். ஆனால் இப்பொருளில் கரைந்துள்ள சில கலப்புப்பொருட்களால் இம்மணம் ஏற்படுகின்றது. இவ்வகை வேதிப்பொருள்களில் உள்ள ஆறு கரிம அணுக்கள், மூடிய ஒரு வளையமாய் அமைந்து, மாறிமாறி ஒற்றைப் பிணைப்பாயும் இரட்டைப் பிணைப்பாயும் இருப்பதை பென்சீன் வளையம் எனக்குறிப்பது வழக்கம். அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் ஒற்றை வளையமாகவோ, பல வளையங்கள் கொண்டதாகவோ இருக்ககூடும்.
அரோமாட்டிக் சேர்மங்கள் பொதுவாக ஆறிலிருந்து பத்து வரையான கரிம அணுக்களைக் கொண்டிருக்கும். இவற்றுள் முதன்மையானவை:
ஆகியவை ஆகும்.