அரி கௌதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரி கௌதம்
Hari Gautam
பணிஇதய அறுவை சிகிச்சை நிபுணர்
அறியப்படுவதுதுணை வேந்தர், சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருத பல்கலைக்கழகம்
மருத்துவப் பணிவாழ்வு

அரி கௌதம் (Hari Gautam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இதய அறுவை சிகிச்சை நிபுணராவார். அரி பிரதாப் கௌதம் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். புது தில்லியிலுள்ள சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருத பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றினார். 1995-1996 ஆம் ஆண்டுகாலத்தில் பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும் இவர் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.[1]

தொழில்[தொகு]

அரி கௌதம் முன்னதாக கிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்,[2] தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவராகவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும்[3] (1999-2002) மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 20 ஆவது துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chancellor | Shri Lal Bahadur Shastri National Sanskrit University". www.slbsrsv.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  2. "Ex-UGC chief to head KGMU". Hindustan Times (in ஆங்கிலம்). 2006-07-08. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
  3. "List of Former Chairpersons". University Grants Commission.
  4. Staff (2006-07-07). "Dr Hari Gautam appointed KGMU VC". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
  5. "Banaras Hindu University, Varanasi". www.bhu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_கௌதம்&oldid=3931097" இலிருந்து மீள்விக்கப்பட்டது