அமெரிக்க பூச்சியியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க பூச்சியியல் சங்கம்
American Entomological Society
உருவாக்கம்மார்ச்சு 1, 1859; 165 ஆண்டுகள் முன்னர் (1859-03-01)
தலைமையகம்பிலடெல்பியா
வலைத்தளம்americanentomologicalsociety.org

அமெரிக்க பூச்சியியல் சங்கம் (American Entomological Society) 1859 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று நிறுவப்பட்டது. மேற்கு அரைக்கோளத்தில் தொடர்ந்து இயங்கும் பழமையான பூச்சியியல் சங்கம் மற்றும் அமெரிக்காவின் பழமையான அறிவியல் சங்கங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] அமெரிக்க பூச்சியல் சங்கத்தின் தலைமையகம் அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியா நகரத்தில் உள்ளது. பூச்சியியல் செய்திகள் என்ற அறிவியல் இதழ், அமெரிக்க பூச்சியியல் சங்கத்தின் பரிவர்த்தனைகள் என்ற காலாண்டிதழ் மற்றும் அமெரிக்க பூச்சியியல் சங்கத்தின் நினைவுகள் என்ற செய்தி மடல் போன்றவற்றை இச்சங்கம் தொடர்ந்து வெளியிடுகிறது.[2] இதேபோல் பெயரிடப்பட்ட மேரிலாந்து மாநிலத்திலுள்ள அனாபொலிசு நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட மற்றொரு அமெரிக்க பூச்சியியல் சங்கத்துடன் இச்சங்கம் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The American Entomological Society - About Us". ansp.org. 2011. பார்க்கப்பட்ட நாள் October 19, 2011.
  2. "American Entomologial Society - Publications". ansp.org. 2011. பார்க்கப்பட்ட நாள் October 19, 2011.

புற இணைப்புகள்[தொகு]