ஹமாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமாசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹமாஸ்
Hamas

''حركة المقاومة الاسلامية''
ஹமாசின் சின்னம்
தலைவர் காலித் மஷால்,
இஸ்மைல் ஹனியா,
மகமுத் சஹார்
தொடக்கம் 1987
தலைமையகம் காசா
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
பாலஸ்தீன தேசியம்,
சண்ணி இஸ்லாமியம்
தளம் www.palestine-info.com

www.filistinetkinlik.com

ஹமாஸ் (Ḥamas, அரபு: حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya "இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்") எனப்படுவது பாலஸ்தீன சுணி இஸ்லாமிய போராளி இயக்கமும் பாலஸ்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்[1].

ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு ஷேக் அகமது யாசின், மற்றும் முகமது தாஹா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலஸ்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது[2].

இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்[3].

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத் இறந்த நாள் தொடக்கம் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்று வந்தது. ஜனவரி 2006 இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hamas sweeps to election victory", BBC News.
  2. "Palestinian election raises varying opinions within U". The Minnesota Daily. January 31, 2006
  3. Calls for the destruction of Israel:
    • "Underlying that theme, [Hamas leader] Zahar promised that Hamas 'will not change a single word in its covenant,' which calls for the destruction of Israel."[[Levitt, Matthew. Hamas: Politics, Charity, and Terrorism in the Service of Jihad, Yale University Press, 2006, ISBN 0-300-12258-6, p. 248.
  4. "Who are Hamas?". BBC News. January 26, 2006. http://news.bbc.co.uk/2/hi/middle_east/1654510.stm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹமாஸ்&oldid=1553937" இருந்து மீள்விக்கப்பட்டது