அப்சரா நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமர் அப்சரா நடனக் கலைஞர்கள்.

அப்சரா நடனம் என்பது கம்போடியா நாட்டின் பாரம்பரிய நடனம் ஆகும். இந்த நடனம் பெண்களால் ஆடப்படுகிறது. மேலும் இறுக்கமாக தைக்கப்பட்ட பாரம்பரிய உடையை அணிந்து பெண்கள் குழுவாக இந்த நடனத்தை மிகவும் நளினமான ஆடுகின்றனர். [1] பாரம்பரிய புராணங்கள் அல்லது மதம் சார்ந்த கதைகளை விவரிக்க அதன் அழகான, பாவனைகள் மற்றும் சைகைகள் மூலம் வெளிப்படுத்தப் படுகின்றன. [2]

வரலாறு[தொகு]

கம்போடியாவில் உள்ள அங்கோரியன் கோயில்களின் (கி.பி. 8 முதல் 13 ஆம் நூற்றாண்டுகள்) அடித்தள கற்களில் செதுக்கப்பட்டுள்ள பெண்கள் நடன சிற்பங்கள் அப்சரா நடனம் பற்றிய ஒரு முக்கிய தகவல்களை குறிப்பதாக அமைந்துள்ளன. இருப்பினும் அனைத்து பெண் உருவங்களும் அப்சரா நடனமாக கருதப்படவில்லை. அப்சரா நடத்துடனான இந்திய நடனங்களுடன் ஒத்துப் போகின்றன., நடனமாடும் அல்லது நடனமாடத் தயாராக இருக்கும் கெமர் பெண் உருவங்கள் அப்சராவாகக் கருதப்படுகின்றன; தனித்தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சித்தரிக்கப்பட்டுள்ள பெண் உருவங்கள், கோவில் பாதுகாவலர்கள் போன்று அசையாமல் முன்னோக்கி நோக்கி நிற்பவா்கள் தேவதாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். [7]

பாசக் தியேட்டரில் அப்சரா நடனக் கலைஞர்கள்.

1940 களில், கிங் நோரோடோம் சூராமரிட்டின் மனைவி ராணி சிசோவத் கொசோமக் நியிராத் செரே வத்தனா, சோதியரத்து தொடக்கப் பள்ளியைப் பார்வையிடச் சென்ற போது. அங்கு தன்னை வரவேற்பதற்காக அங்கோர் அப்சரா நடனம் ஆட பள்ளி ஆசிரியர் அங்கு படிக்கும் ஒரு மானவியைத் தயார் செய்திருந்தார். காகிதங்களால் செய்யப்பட்ட மலர்கள், கிரீடங்கள், சம்போத் என்றழைக்கப்படும் இடுப்புக் கச்சை போன்ற அப்சரா உடையில் இளம் பள்ளி குழந்தைகள் நிகழ்த்திய அப்சரா நடனம் அங்கோர் வாட்டை . பிரநிதித்துவப் படுத்தின. அதனைப் பார்த்த ராணிக்கு ஒரு தூண்டுதல் ஏற்பட்டு கிரீடம் அனிந்த அப்சரா நடனத்தை மீண்டும் மறு உருவாக்கம் செய்யும் யோசனை தோன்றியது. இந்த நடனம் ராணியின் முதல் பேத்தியான இளவரசி நோரோடோம் புப்பா தேவி, (நோரோடோம் சிஹானூக்கின் மகள்), நவீன சகாப்தத்தின் முதல் தொழில்முறை அப்சரா நடனக் கலைஞராக ஆனார். இளவரசி 5 வயதில் நடனத்தை பயிற்சி செய்யத் தொடங்கினார் மற்றும் கிங் நோரோடோம் சிஹானூக்கின் ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக அப்சரா நடனமாடினார்.

1967 ஆம் ஆண்டில் தேகம் மெலிந்த இளம் இளவரசி, பட்டு மற்றும் ஒளிரும் நகைகள் அணிந்து அரச நடனக் குழுவுடன் சேர்ந்து அரண்மனையின் திறந்த அரங்கில் நட்சத்திரங்களுடன் சிறு வயது குழந்தையாக நடனமாடினார். அவரது பாட்டி ராணி சிசோவத் கொசோமக் தேர்ந்தெடுத்த பின்பீட் இசைக் குழுவுடன். அப்சரா நடனத்தின் முதன்மை நடனக் கலைஞராக அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

உடை பாணி[தொகு]

அப்சரா பாத்திரத்தின் உடைகள் அங்கோர் வாட்டின் அஸ்திவார சிற்பங்களின் அடிப்படையில் சித்தரிப்பது போன்று உள்ளன. தேவதாசாக்களை அடிப்படையாகக் கொண்டவை இந்த உடைகள் அவர்கள் ஒரு சம்போட் சரபாப் என்றழைக்கப்படும் நீளமாக தொங்கும் பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய இடுப்பில் அணியும் பட்டால் ஆன துணி ஒன்றை அணிந்துகொள்கிறார்கள்.

அப்சரா நடனக் கலைஞரின் நடனக்காட்சி

தலையணி[தொகு]

அப்சரா நடனத்தை ஆடும் முதன்மைக் கலைஞரின் தலைக்கவசம் (தலையணி) மூன்று உச்சிகளை அல்லது முனைகளையும் இரண்டு வரிசை கோள அலங்காரங்களைக் கொண்டுள்ளது. துணை நடனக் கலைஞர்கள் அணியும் தலைக்கவசம் பொதுவாக மூன்று முனைகளுடன் ஒரே ஒரு கோள அலங்காரத்தையும் மட்டுமே கொண்டுள்ளது. இந்த கிரீடங்களில் பெரும்பாலும் செயற்கை முடியுடன் மாலைகளும் உள்ளன. ஐந்து முனை அல்லது உச்சி கிரீடங்கள் நவீன நடன நடைமுறைகளில் அடிக்கடி பணன்படுத்துவது இல்லை.

மேலும் காண்க[தொகு]

  • கம்போடியாவில் நடனம்
  • தாய்லாந்தின் நடனம்
  • பூவில் பூமி
  • கெமர் கிளாசிக்கல் நடனம்
  • எச்.ஆர்.எச் நோரோடோம் புப்பா தேவி

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.roughguides.com/website/travel/destination/content/default.aspx?titleid=107&xid=idbox_head33982200_0171[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Di Giovine, Michael A. The Heritage-Scape. 2008, page 293-4

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சரா_நடனம்&oldid=3231554" இலிருந்து மீள்விக்கப்பட்டது