அபுல் கலாம் கஸ்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபுல் கலாம் கஸ்மி (Abul Kalam Qasmi) (20 டிசம்பர் 1950 - 8 சூலை 2021) அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் கலைப்புலத்தின் துறைத்தலைவராகப் பணியாற்றிய உருது மொழியில் புலமை கொண்ட அறிஞர், விமர்சகர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் தெஹ்ஸீப்-உல்-அக்லக்கின் ஆசிரியராகவும், தி கிரிட்டிசிசம் ஆப் பொயட்ரி போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் இ. எம். பிராஸ்டரின் ஆஸ்பெக்ட்ஸ் ஆப் தி நாவல் என்ற நூலை உருது மொழியில் நாவல் கா `ஃபன் என்ற பெயரில் மொழிபெயர்த்தார் . இவருக்கு 2009 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

இவர் தாருல் உலூம் தேவ்பந்த், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராக இருந்தார். 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் உருதுத் துறையின் தலைமைப் பேராசிரியராக பணியாற்றினார். இவர் உருது விமர்சனத்தின் முக்கிய தூணாக கருதப்பட்டார்.

சுயசரிதை[தொகு]

அபுல் கலாம் கஸ்மி 1950 டிசம்பர் 20 அன்று பீகார் தர்பங்காவில் பிறந்தார். [1] இவர் மதரஸா காசிம் அல்-உலும் ஹுசைனியாவில் தனது தொடக்கக் கல்வியைப் பற்றார். இவர் டார்ஸ்-இ-நிஜாமிலிருந்து டாருல் உலூம் தேவ்பந்த் பல்கலைக்கழகத்தில் 1967 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் தனது புதுமுக வகுப்பை மேற்கொண்டார். இவர் முறையே 1973 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mushtaq Ahmad Sadaf, Abul Kalām Qāsmi: Shakhsiyat awr Adbi khidmāt, p. 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுல்_கலாம்_கஸ்மி&oldid=3192258" இலிருந்து மீள்விக்கப்பட்டது