அன்வர் அலி (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்வர் அலி (Anwar Ali (பிறப்பு:25 நவமபர், 1987 ) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.வலதுகை மட்டையாளரான இவர் வலது கை மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார்.இவர் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி, மற்றும் கராச்சி செப்ராஸ், சிந்த் டால்பின்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோர் துடுப்பாட்ட உலகக் கிண்ணக் கோப்பை வென்ற பாக்கித்தான் அணியில் இருந்தார். மேலும் இறுதிப்போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

அனவர் அலி கராச்சியில் உள்ள சிந்த் மாகாணத்தில் வாழ்ந்து வந்தார். இளமைக் காலத்தில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள லங்காஷயர் லீக்கில் காலணி துடுப்பாட்ட சங்கத்திற்காக தொழிற்முறை துடுப்பாட்டத்தில் விளையாடினார். பின் 2012 ஆம் ஆண்டில் வடக்கு அயர்லாந்து துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார்.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் கோப்பைக்கான தொடரில் இவர் பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) அணிக்காக விளையாடினார்.[1][2]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

2008 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். அக்டோபர் 12 இல் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசி 9 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்ற இயலவில்லை. பின் அதற்கு அடுத்த இரு போட்டிகளிலும் தலா இரு இலக்குகளை வீழ்த்தினார். அந்தத் தொடரை பாக்கித்தான் அணி வென்றது. சிம்பாப்வே தொடரிலும் அதன் பின் நடந்த உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதாலும் இவருக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் பிலாவல் பாத்தியுடன் இணைந்து ஓவர்களை வீசினார். இதில் 6 ஓவர்களை வீசி 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது. பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 41* ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் ஓர் இலக்கினையும் வீழ்த்தினார்.

2015 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது. இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் விளையாடினார். அதில் இலங்கை அணி முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் 172 ஓட்டங்களை எடுத்தது. பாக்கித்தான் அணி 40 ஓட்டங்களில் 5 இலக்குகளை இழந்தது. பின் பாக்கித்தான் அணியின் தலைவர் (துடுப்பாட்டம்) சாகித் அஃபிரிடி 22 பந்துகளில் 45 ஓட்டங்களை எடுத்தார். பின் அஃப்ரிடி ஆட்டம் இழந்த பின் அனவர் அலி 17 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 நான்குகளும் 4 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 1 இலக்குகளில் வெற்றி பெற்றது. மேலும் இவர் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இந்தத் தொடரை 2-0எனும் கணக்கில் பாக்கித்தான் கைப்பற்றியது.[3][4]

சான்றுகள்[தொகு]

  1. "Pakistan Cup one-day tournament to begin in Faisalabad next week". Geo TV. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  2. "Pakistan Cup Cricket from 25th". The News International. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  3. "Afridi, Anwar Ali stun SL with one-wicket win".
  4. "Narrow wins, and the highest by a No. 9".

வெளியிணைப்புகள்[தொகு]