அனிதா கோச்சிரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா எல். கோச்சிரன்
பிறப்புநியூயார்க், நியூயார்க்
வாழிடம்டெக்சாசு
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
பணியிடங்கள்ஆசுட்டீன் டெக்சாசு பலகலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கார்னெல் பல்கலைக்கழகம்,
ஆசுட்டீன் டெக்சாசு பலகலைக்கழகம், (முதுபட்டங்களும் முனைவர் பட்டமும்.)

அனிதா எல். கோச்சிரன் (Anita L. Cochran) ஓர் வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆசுட்டீன் டெக்சாசு பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிவியலாளரும் ஆவார்.[1] இவர் மெக்டொனால்டு வான்காணக ஆராய்ச்சி உதவி இயக்குநரும் ஆவார்.[2] இவர் சூரியக் குடும்பத் தொடக்கநிலை வான்பொருள்களின் ஆய்விலும் வால்வெள்ளிகளின் உட்கூறுகளின் ஆய்விலும் கவனம் குவித்துள்ளார்.[3]

இளமையும் கல்வியும்[தொகு]

கோச்சிரன் நியூயார்க் நகரில் பிறந்தார்.[4] and raised on Long Island.[5] இவர் 1976 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்ரார். இன்னர் இவர் ஆசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வானியலில்1979 இல் முதுவர் பட்டமும் 1982 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் தன் வானியல் வாழ்க்கையில் பல தலைமைப் பாத்திரங்களை வகித்துள்ளார். இவர் 1995 முதல் 1996 வரை அமெரிக்க வானியல் கழகத்தின் கோள் அறிவியல் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.[6] இவர் அப்பிரிவின் குழு உறுப்பினரக 1989 முதல் 1992 வரை இருந்துள்ளார்.[7] இவர் தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் பல குழுக்களில் பணியாற்றி உள்ளார்,[1][8] இவற்றில் கோள்கள், நிலாக்கள் தேட்டக் குழுவும் அடங்கும்.[9] (COMPLEX). இவர் வால்வெள்ளிக் கருப் பயண அல்லது காண்டூர் (CONTOUR) இலக்குத்திட்டத்தின் இணை ஆய்வாளரும்.[4][10] நாசாவின் வால்வெள்ளி சுற்றும் சிறுகோள் பறப்புத் திட்டப் படிமப் பதிவுக் குழுவின் உறுப்பினரும் ஆவார்.[1]

இவர் இப்போது பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆவார்[11] மேலும், தேசிய ஒளியியல்சார் வானியல் காணக உறுப்பினரும் ஆவார்.[1]

சொந்த வாழ்க்கை[தொகு]

அனிதா கோச்சிரன் தன்னுடன் வானியலாளராகப் பணிபுரிந்த பில் கோச்சிரனை மணந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "UT Experts : University Communications : The University of Texas at Austin". experts.utexas.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
  2. "University of Texas at Austin Department of Astronomy". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. 3.0 3.1 "Anita Cochran - Astronomy". www.as.utexas.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
  4. 4.0 4.1 4.2 "Cochran | McDonald Observatory". mcdonaldobservatory.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
  5. "Anita Cochran | People". NASA Solar System Exploration. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Past DPS Officers | Division for Planetary Sciences". dps.aas.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
  7. "Past DPS Committee Members | Division for Planetary Sciences". dps.aas.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
  8. Front Matter | A Scientific Assessment of a New Technology Orbital Telescope | The National Academies Press (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.17226/9295.
  9. APPENDIX: PARTICIPATING DISCIPLINE COMMITTEES | Scientific Opportunities in the Human Exploration of Space | The National Academies Press (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.17226/9188.
  10. "Anita Cochran: Build Collaborations" (in en-US). Women in Planetary Science: Female Scientists on Careers, Research, Space Science, and Work/Life Balance. 2010-09-28. https://womeninplanetaryscience.wordpress.com/2010/09/28/anita-cochran/. 
  11. "International Astronomical Union | IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_கோச்சிரன்&oldid=3231332" இலிருந்து மீள்விக்கப்பட்டது