அந்தி இளங்கீரனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தி இளங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரில் ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது.

பாடல்[தொகு]

அகம் 71 பாலை

புலவர் பெயரின் விளக்கம்[தொகு]

இவரது இயற்பெயர் இளங்கீரன். இவர் கதிரவன் மறையும் அந்தி வேளையை 'பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை' என்று சிறப்பித்துள்ளமையால் இவருக்கு 'அந்தி' அன்னும் அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.

பாடல் தரும் செய்தி[தொகு]

தலைவன் பிரிந்திருந்தபோது தலைவி தன் வருத்தத்தைத் தோழிக்குப் புலப்படுத்துகிறாள்.

உவமை நலன்கள்[தொகு]

  • செல்வம் குறைந்தோர் பயனின்மையில் நிறைந்தோரைத் தேடும் 'நயனில் மாக்கள்'
  • நயனில் மாக்களைப் போல வண்டினம் சுனைப்பூவை விட்டுவிட்டுச் சினைப்பூவை நாடல்
  • வானம் வெந்து ஆறு ஓடுவதுபோல அந்தி பூத்தல்
  • 'நிழல் கால் மண்டிலம்' என்னும் கண்ணாடியில் என் உள்ளம் ஊதும் பெருமூச்சுக் காற்று படிந்து மங்குவது போல என் மதுகை(உள்ளத்தின் உரம்) மாயந்துகொண்டிருக்கிறது போலும்
  • என் உயிர் மரத்திலிருந்து புள் பறப்பது போல் பறந்துவிடும்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தி_இளங்கீரனார்&oldid=3204170" இலிருந்து மீள்விக்கப்பட்டது