அத்தாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு அத்தாங்கு

கிழக்கிலங்கையில் பாவிக்கப்படும் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் அத்தாங்கு முறை மீன்பிடி முறையும் குறிப்பிடத்தக்கது. இது மட்டக்களப்பில் கன்னங்குடா, தேத்தாத்தீவு, குருக்கள்மடம் போன்ற இடங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. பொதுவாக பெண்களே அத்தாங்கு முறையை பயன்படுத்தி மீன்பிடிப்பது வழக்கம்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் களப்புகளில் காணப்படும் கண்ணா, கிண்ணை போன்ற கண்டல் நில மரங்களினை சுற்றி பெண்கள் அத்தாங்குடன் நின்றுகொள்வர். பின்னர் கூட்டத்தில் ஒரு பகுதியில் அத்தாங்குடன் இருக்கும் பெண்கள் நீரில் உள்ள பாசிகளை எடுத்து மரத்தின் நடுப்பகுதி நோக்கி வீசுவர். பாசி சென்று வீழ்ந்த அதிர்ச்சியால் மீன்கள் நிலைகுலைந்து ஓடும் போது மற்றைய பகுதியில் உள்ள பெண்கள் அத்தாங்கினை ஒரு பொறி போல உபயோகப்படுத்தி அதிர்வினால் ஓடும் மீன்களை பிடிப்பர்.

கோடைகாலங்களில் வற்றிய நிலையில் உள்ள குளங்களில் மீன் பிடிக்க அத்தாங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் ஈர மண்ணினுள் அத்தாங்கினை புகுத்தி வெளியே எடுப்பதன் மூலம் மண்ணுடன் இணைந்தவாறே ஈர மண்ணினுள் புதைந்தபடியே வாழும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தாங்கு&oldid=3170702" இலிருந்து மீள்விக்கப்பட்டது