அட்லசு (தொன்மவியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்லசின் சிற்பம், Praza do Toural, Santiago de Compostela
அட்லசு என்பவன் கிரேக்கத் தொன்மங்களில் (புராணங்களில்) கூறப்படும் ஓர் அசுரன் (டைட்டன்). இவன் புரோமித்தியசின் சகோதரனுமாவான். அரக்கர் போரில் (War of titans) கலந்து கொண்ட இவனைத் தண்டிக்கும் பொருட்டு விண்ணுலகைத் தாங்கி நிற்கும் படி கிரேக்கர்களின் தலைமைக் கடவுள் ஜீயஸ் (Jeus) பணித்தார்.