அடாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அடாரி | |
|---|---|
| அமைவு: | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பஞ்சாப் |
அடாரி பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் இந்திய தலைநகரான புது தில்லியையும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தையும் இணைக்கும் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்திய எல்லையை தாண்டி செல்லும் ஸம்ஜௌதா விரைவு இரயில் அடாரியிலிருந்து துவங்கி 3 கி.மீ. துலைவில் உள்ள பாகிஸ்தானின் வாகா வரை இயக்கபடுகிறது.
பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 13 ஏப்ரல் 2012 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை நிலையம் அடாரியில் நிறுவப்பட்டது.