அசைல்சிலேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசைல்சிலேனின் பொதுக் கட்டமைப்பு

அசைல் சிலேன்கள் (Acylsilanes) என்பவை R(CO)-SiR3 என்ற பொதுக் கட்டமைப்பில் பொதுவான வேதி வினைக்குழுவை பகிர்ந்துகொள்ளும் வேதிச் சேர்மங்களைக் குறிக்கும். இலித்தியம் சேர்மங்கள் முதல் சிலில் ஈனால் ஈதர்கள் வரையிலான சேர்மங்களுடன் அசைல்சிலேன்கள் புரூக் மறுசீரமைப்பு வினையில் தொடக்க வினைபொருளாகப் பயன்படுகின்றன.[1]

தயாரிப்பு[தொகு]

பின்வரும் நடைமுறைகளைப் பயன்படுத்தி அசில்சிலேன்களை தயாரிக்க முடியும்: 1,3-இருதயேனில் தொடங்கி, சிலில் குழுவை பதிலீடு செய்ய வேண்டும். பின்னர் இருதயோ அசிட்டால் குழுவை பாதரசம்(II) குளோரைடு மற்றும் நீராற்பகுப்பு மூலம் நீக்க வேண்டும்.[2] இந்த முறையில் பொருத்தமான ஆலோசெருமேன் வினையாக்கிகளைப் பயன்படுத்தி அசைல்செருமேனை உருவாக்கலாம்.

புரூக் அசைல்சிலேன் தொகுப்பு திட்டம். அசைல்செருமேன்களை தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

1,1-பிசு(மும்மெத்தில்சிலில்)ஆல்க்கேன்-1-ஆல்களைப் உருவாக்கும் மற்றொரு முறை குவாசிமா மற்றும் குழுவினர் மூலம் தெரிவிக்கப்பட்டது.[3] தொடக்க வினைபொருளை மூவிணைய பியூட்டைல் ஐப்போகுளோரைட்டு அசைல் சிலேனாக மாற்றுகிறது.

1,1-பிசு(மும்மெத்தில்சிலில்)ஆல்க்கேன்-1-ஆல் உருவாக்கும் முறையுடன் குவாசிமாவின் அசைல்சிலேன் தயாரிப்பு வினை

மேற்கோள்கள்[தொகு]

  1. The reactivity of α- and β-iodo propenoylsilanes: an alternative access to polyunsaturated acylsilanes Alessandro Degl’Innocenti, Antonella Capperucci, Patrizia Scafato, Antonella Telesca Arkivoc 0-005A 2000 Article
  2. Brook, A. G. (Jan 1, 1967). "Synthesis of Silyl and Germyl Ketones". Journal of the American Chemical Society 89 (2): 431–434. doi:10.1021/ja00978a047. 
  3. Kuwajima, Isao; Abe, Toru; Minami, Naoki (1976-09-05). "AN EFFICIENT METHOD FOR THE PREPARATION OF ACYLSILANE AND α-HALOACYLSILANE". Chemistry Letters 5 (9): 993–994. doi:10.1246/cl.1976.993. பன்னாட்டுத் தர தொடர் எண்:0366-7022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசைல்சிலேன்&oldid=3848190" இலிருந்து மீள்விக்கப்பட்டது