அங்கூர் தாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கூர் தாமா
Ankur Dhama
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்பு1994
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் தடகளம்
நாடு  இந்தியா
இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 காங்சூ ஆண்கள் 1500 மீ டி11
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 காங்சூ ஆண்கள் 5000 மீ டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 இஞ்சியோன் ஆண்கள் 800 மீ டி11
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இஞ்சியோன் ஆண்கள் 1500 மீ டி11
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இஞ்சியோன் ஆண்கள் 5000 மீ டி11
அங்கூர் தாமாவிற்கு ராம் நாத் கோவிந்த் அருச்சுனா விருதை வழங்குகிறார்

அங்கூர் தாமா (Ankur Dhama) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். இணை-தடகள வீரரான் இவர் நீண்ட தூர ஓட்டப்பந்தயப் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடுகிறார். இவருக்கு 2018 ஆம் ஆண்டு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அங்கூர் தாமாவுக்கு ஆறு வயதாக இருந்தபோது, ஓலி வண்ணங்களால் நோய்த்தொற்று ஏற்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. [1] பின்னர், இவர் தில்லிக்குச் சென்றார். அங்கு பார்வையற்றோருக்கான இயேபிஎம் மூத்த மேல்நிலைப் பள்ளியில் படித்தார். செயின்ட் இசுடீபன் கல்லூரியில் வரலாறு பாடம் படிக்கச் சென்றார். [2]

தொழில்[தொகு]

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது காயமடைந்தார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2 Asian Para gold medals for banker who lost eyes on Holi". https://timesofindia.indiatimes.com/city/meerut/2-asian-para-gold-medals-for-banker-who-lost-eyes-on-holi/articleshow/104741913.cms. 
  2. "DU student Ankur Dhama first blind athlete to represent India at paralympics". https://economictimes.indiatimes.com/news/sports/du-student-ankur-dhama-first-blind-athlete-to-represent-india-at-paralympics/articleshow/53940637.cms. 
  3. "Meet Ankur Dhama, athlete who clinched 2 gold medals at Asian Para Games" (in ஆங்கிலம்). 2023-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கூர்_தாமா&oldid=3842238" இலிருந்து மீள்விக்கப்பட்டது