ஹரகுமார் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹரகுமார் தாகூர் (Hara Kumar Tagore) (1798-1858) இவர், கொல்கத்தாவின் ஓர் முன்னணி நில உரிமையாளாரகவும், கொடையாளியாகவும் [[சமசுகிருதம்}சமசுகிருத]] அறிஞராகவும், எழுத்தாளாராகவும் மற்றும் இசைக்கலைஞராகவும் இருந்துள்ளார். இவர் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த பாதுரியகட்டா கிளையைச் சேர்ந்தவர்.

கோபி மோகன் தாகூரின் மூத்த மகனான இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு பாதுரியகட்டா குடும்பத்திற்கு தலைமை தாங்கினார். [1]

பணிகள்[தொகு]

ஹரகுமார் தாகூர், இந்து வேதங்கள், சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றார். இவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட புத்தகங்களைத் தொகுத்தார். சப்தகல்பத்ரம் என்ற நூலைத் தொகுப்பதில் இராதாகாந்த தேவ் என்பவருக்கு (1783–1867) உதவினார். [2]

படைப்புகள்[தொகு]

மேலும், அரதத்வா-தீதி (1881), புராச்சரண-போதினி (1895) மற்றும் சிலா-சக்ரார்த்தபோதினி போன்ற நூல்கள்: இவரால் இயற்றப்பட்டது. சிலா-சக்ரார்த்தபோதினி என்பது பல்வேறு வகையான கற்களைக் கையாள்கிறது, அவை நாராயணனின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. [3] பல்வேறு தாந்த்ரீக சடங்குகள், குறிப்பாக காளி வழிபாடு தொடர்பான நடைமுறை விஷயங்களில் ஒரு கையேட்டையும் எழுதினார். [4]

இசையமைப்பாளர்[தொகு]

சமசுகிருதத்தில் உதவித்தொகை பெற்ற ஒரு இசைக்கலைஞரான இவர் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராகவும் இருந்தார். [5]

குடும்பம்[தொகு]

இவர் பிரசன்னா குமாரின் மூத்த சகோதரர் ஆவார். ஹரா குமார் 1858இல் இறந்தார்; இவரது மூத்த மகன் மகாராஜா சர் ஜதிந்த்ரமோகன் தாகூர் அவர்களால், குடும்பத்தின் பாதுரியகட்டா கிளை கிளைத்து வளர்ந்தது. [1] இவருக்கு சௌரிந்திரமோகன் மற்றும் சௌதிந்திரமோகன் என்ற இரு மகன்களும் இருந்தனர்.

நினைவு[தொகு]

இவர் தனது தந்தையின் நினைவாக தனது சகோதரர் பிரசன்ன குமாருடன் முலிசோர் என்னுமிடத்தில் ஒரு கோவிலைக் கட்டினார்.. [6] மேலும், கலை மற்றும் இசைக்காக இவர் தாராளமாக பணத்தை நன்கொடையாக வழங்கினார்.

இவர் புகழ்பெற்ற "எமரால்டு போவர்," என்றா ஒரு அழகான மாளிகையை கட்டியிருந்தார். இதை மேற்கு வங்க அரசு கையகப்படுத்தியது. இது இப்போது ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. [7] [8]

கொல்கத்தாவில் உள்ள ஒரு சதுக்கத்திற்கு ஹரகுமார் தாகூர் சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 The Golden Book of India: A Genealogical and Biographical Dictionary of the Ruling Princes, Chiefs, Nobles, and Other Personages, Titled Or Decorated, of the Indian Empire by Sir Roper Lethbridge, Publisher : Macmillan & Company, 1893 pp: 527
  2. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p. 611
  3. A handbook of West Bengal - Volume 2. Sanghamitra Saha, International School of Dravidian Linguistics. 1998. p. 667.
  4. Sanskrit Culture Of Bengal by Sures Chandra Banerji. Sharada Publishing House. 2004. p. 116.
  5. Musicians of India: Past and Present : Gharanas of Hindustani Music and Genealogies. Amala Dāśaśarmā Naya Prokash. 1993.
  6. The Modern History of the Indian Chiefs, Rajas, Zamindars, & C: The native ... By Lokanātha Ghosha. 1881.
  7. [1]
  8. "Hara kumar Tagore, the poet's uncle, built a mansion called the Emerald Bower, and this building and its park-lands, later acquired by the Government of West Bengal, finally became a complex of academic institutions among which this University has the central and larger share". Archived from the original on 12 March 2014. பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரகுமார்_தாகூர்&oldid=3308684" இலிருந்து மீள்விக்கப்பட்டது