பட்டடைக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பபட்டடைக்கல்
கருமார் பட்டடைக்கல்ல்ல் சுத்தியல் கொண்டு இரும்புவேலை செய்தல்
பின்லாந்தில் உலோகோமோகோ பட்டடைக்கல்லில் சம்மட்டி அடிக்கும் உதவியாளருடன் இரும்புவேலை செய்தல்
இடைக்காலக் கட்டுமானக் களத்தில் பட்டடைக்கல், குவேத்ர்லான் கோட்டை, திரெய்கினி, பிரான்சு.

பட்டடைக்கல் (anvil) என்பது வார்ப்பிரும்பால் அல்லது வடித்த எஃகாலான பொன்ம வேலை செய்யும் தட்டையான பரப்பமைந்த அகலமான பொன்மத் துண்டு ஆகும். இதன் மீது வேறொரு இரும்பு அல்லது எஃகுப் பணிப்பொருளை வைத்து வேலை செய்யப்படுகிறது.

பட்டடைக்கல் நடைமுறையில் எடைதிரண்டதாக அமைய வேண்டும். அப்போது தான் நாம் சமட்டியால் அடிக்கும் முழு ஆற்றலும் பணிப்பொருளுக்கு மாற்றப்படும். பெரும்பாலும் இது வடித்தே செய்யப்படுகிறது. பற்றுவைப்புத் தொழில்நுட்பம் வருவதற்கு முன் இது பொன்மப் பணியாளரின் முதன்மையான கருவியாக விளங்கியது.[1][2]

பெரும்பாலான தற்காலப் பட்டடைக்கற்கள் வார்ப்பிருபாலோ வடித்த எஃகாலோ செய்யப்படுகின்றன. இவற்றில் வெப்பப்பதம் படுத்திய பின்னதே வலிமை மிக்கது. விலைமலிவான பட்டடைக்கற்கள் வார்ப்பிரும்பாலோ தரங்குறைந்த எஃகாலோ செய்யப்படுகின்றன. மிகச் சீரிய பணிகளுக்கு இவை உருமாற்றம் அடைவதாலும் எதிர் அதிர்ச்சி த்ருவதாலும் ஏற்றனவாக அமைவதில்லை.

கட்டமைப்பு[தொகு]

ஒற்றைக் கொம்பு பட்டடைக்கல்
இலண்டன்வகை பட்டடைக்கல்லின் மேற்பரப்புக் காட்சி

வகைகள்[தொகு]

Anvil of a farrier
A silversmith's stakes and hammers, 1981


மேற்கோள்கள்[தொகு]

  1. Hahn, Robert. Archaeology and the Origins of Philosophy. Publisher: State University of New York Press 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1438431659
  2. King James Version ISAIAH 41:7

மேலும் படிக்க[தொகு]

  • Andrews, Jack (1994). New Edge of the Anvil. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-879535-09-1.
  • Hrisoulas, Jim (1987). The Complete Bladesmith: Forging Your Way to Perfection. Boulder, Colorado: Paladin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87364-430-3.
  • Postman, Richard (1998). Anvils In America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9663256-0-7.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anvils
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டடைக்கல்&oldid=3582768" இலிருந்து மீள்விக்கப்பட்டது