கொடவனாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடவனாறு அல்லது குடவனாறு (Kodavanar River) என்பது தமிழ்நாட்டின் பழனி மலையில் பாய்கின்ற ஓர் ஆறு ஆகும் . அமராவதி ஆற்றின் துணைநதியாக இது பாய்கிறது.[1]

காமராசர் ஏரிக்கு வடக்கே 800 மீட்டர் உயரமுள்ள கன்னிவாடி மலையும் மேற்கே 1500 மீட்டர் உயரமுள்ள பழனி மலையும் உள்ளன. பன்றிமலையிலிருந்து மேல்முகப்பகுதி கருவல்லியாறு எனவும் கீழ்முகம் குழல் ஆறு எனவும் அழைக்கப்படும் ஆறு ஓடுகிறது. காமராசர் பள்ளத்தாக்கின் வடமேற்கு பக்கத்தில் பழனி மலையும் கன்னிவாடி மலையும் சேருகின்ற இடத்தில் குழல் ஆறு நுழைகிறது. இவ்வாறு வழியில் இரண்டு அருவிகளின் வழியாகவும் பல அடுக்கு சரிவு நிலப் பகுதிகள், குட்டைகளின் வழியாகவும் ஓடுகிறது.

தாண்டிக்குடி என்னும் பகுதியில் தொடங்கி பண்ணைக்காடு பகுதியைக் கடந்து பள்ளத்தாக்கின் தென்மேற்கு பகுதி வழியாக காமராசர் ஏரியை வந்து அடையும் மற்றொரு ஆறு கொடவனாறு அல்லது குடவனாறு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Francis, W. (1989). Gazetteer of South India (in ஆங்கிலம்). Mittal Publications.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடவனாறு&oldid=3690738" இலிருந்து மீள்விக்கப்பட்டது