பேச்சு:விசாகப்பட்டினம் மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாகப்பட்டினம் மாவட்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மண்டலங்கள்[தொகு]

இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டலங்களைப் பற்றிய குறிப்புகள்.

1. ஒரே மண்டலத்திலும், வெவ்வேறு மண்டலத்திலும் ஒரே பெயரைக் கொண்ட ஊர்கள் உள்ளன. இரண்டு முறை தவறாக எழுதியதாக நினைத்து நீக்க வேண்டாம்.

2. இவற்றிற்கு இணையான தெலுங்கு விக்கி கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. அவற்றில் சில பிழைகள் உள்ளன. குறிப்பாக, ஊர்களின் எண்ணிக்கையில் பிழைகள் உள்ளன. தமிழ் விக்கியில் இற்றைப்படுத்தப்பட்டே எழுதப்படுகிறது.

3. வட்டம்/மண்டலம் தொடர்பான கட்டுரைகள், வட்டத்தின் பெயரால் அமைந்த ஊரைப் பற்றிய வேற்று மொழிக் கட்டுரைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. (இந்திய வட்டங்களைப் பற்றிய பல கட்டுரைகளின் நிலையும் இதுவே.) தெலுங்கில் மண்டலத்தைப் பற்றிய கட்டுரை, ஆங்கிலத்தின் ஊருடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கி கட்டுரைகளும் தற்காலிகமாக இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மண்டலத்திற்கும், அதே பெயரில் அமைந்த ஊருக்கும் இரு கட்டுரைகள் உருவான பின்னர் இணைப்புகளை மாற்றலாம். அது வரை இதே நிலையில் தொடரட்டும்.

மேற்கூறியவற்றிற்கு தீர்வாக ஆந்திர அரசின் இணையதளப் பக்கங்களை முதல் நிலை மூலமாகக் கொண்டு சான்று தரப்படுகிறது. பிழை இருப்பதாகக் கருதுவோர் சான்றை பார்க்கவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:12, 23 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]